மும்பையில் குடியேறிவிட்டாரா ஜெயம் ரவி? அப்போ ஆர்த்தியும் குழந்தைகளும்? பனையூரில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜெயம் ரவி மும்பைக்கு குடியேறத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மும்பையில் இருப்பது போல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில் அவர் மும்பைக்கு செல்கிறார் என்ற தகவல் அவருடைய குடும்பத்தினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவிக்கும் மனைவி ஆர்த்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இதனை உண்மையாக்கும் விதமாக கடந்த 9ஆம் தேதி ஜெயம் ரவி, ஆர்த்தியை பிரிவதாக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

television jayam ravi mumbai

இது எல்லோருடைய நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என தெரிவித்திருந்தார். ஆனால் இதை ஆர்த்தி பகிரங்கமாக மறுத்தார். தனக்கே தெரியாமல் விவாகரத்து செய்வதாக ரவி கூறியதாக டிவிஸ்ட் அடித்தார் ஆர்த்தி. மேலும் சமூகவலைதளங்களில் தன்னை பற்றி தவறாக பேசப்படுவது வேதனையை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் ஜெயம் ரவியுடன் தான் பேசுவதற்கு முயற்சி செய்த போதிலும் அவருடன் பேச முடியவில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயம் ரவிக்கும் கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷாவுக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த தகவலை இருவருமே மறுத்து, இனி இது போல் தவறாக பேசாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தன் மனைவி ஆர்த்தி, தன்னை பனையூர் வீட்டை விட்டு துரத்திவிட்டதாகவும் வீட்டிலிருந்த பொருட்களை மீட்டுத் தருமாறும் காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜெயம் ரவி திரைத்துறையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இவர் நடித்துள்ள பிரதர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. முதலில் பிரதர் வெளியீட்டைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதியின் காதலிக்க நேரமில்லை வெளியாகும் என தெரிகிறது. அது போல் ஜீனி என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயம் ரவி, மும்பைக்கு குடியேறத் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அங்கு அவர் அலுவலகத்தை அமைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அங்கு பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த விரைவில் முழுமையாக குடியேறுவார் என்கிறார்கள். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+