ஆரம்பமே அசத்தல்.. ஜெயம் ரவி பேரை டக்னு மாத்திக்கிட்டாரே? ரவி மோகன் பின்னாடி இப்படியொரு காரணமா? ஓஹோ
சென்னை: திடீரென தன்னுடைய பெயரை, ரவி மோகன் என அழைக்குமாறு, பிரபல நடிகர் ஜெயம் ரவி அறிவித்திருந்தார்.. இதற்கான காரணங்கள் என்ன ஏதென்று தெரியாத நிலையில், அதுகுறித்த தகவல் ஒன்று இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
கடந்த 2003-ம் ஆண்டு தன்னுடைய சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகர் ரவி. இந்த படம் அபார வெற்றி பெற்றதால், தன்னுடைய பெயருக்கு முன்னால் "ஜெயம்" என்பதை சேர்த்து, ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டார்.

தனி ஒருவன்: அப்போதிருந்தே, தமிழ் திரையுலகில் எம் குமரன், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், பேராண்மை, தனி ஒருவன் தொடங்கி பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து, முக்கிய நடிகராகவும், முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு, தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என்பதிலிருந்து, "ரவி மோகன்" என்று மாற்றியிருப்பதாகவும், ரசிகர்களும், பொதுமக்களும் தன்னை ரவி அல்லது ரவி மோகன் என்றே அழைக்குமாறும் அறிவித்திருந்தார். அத்துடன் தன்னுடைய ரசிகர் மன்றத்தை ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளை என்று மாற்றியிருப்பதாகவும், ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பதாகவும் ரவி கூறியிருந்தார்.
அறிக்கை: இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.. அதில், இந்த புதிய பெயர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்து செல்லும் என்றும், தன்னுடைய கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் தன்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாறும், ஜெயம் ரவி என்ற பெயரில் இனி வரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
உலகளவில் ரசிகர்கள் கொண்டாடும் சினிமாவை திரைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன், ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளதாகவும் தன்னுடைய அறிக்கையில் கூறியிருந்தார். ரவி மோகன் என்று பெயரையும், தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையும் மாற்றி கொண்டாலும், அதற்கான காரணத்தை ஜெயம் ரவி வெளியிடவில்லை.. தற்போது அதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
காரணம் என்ன?: அதாவது, காதலிக்க நேரமில்லை பட புரோமோஷனுக்காக விஜே சித்துவின் மொட்டை மாடி பார்ட்டியில் கலந்துக்கொண்டாராம் ஜெயம் ரவி..
அப்போது சித்து, "ஜெயம் படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிவிட்டதே? இன்னும் எதுக்காக ஜெயம் ரவின்னே பெயர் வைத்துக் கொண்டு சுத்திக்கிட்டு இருக்கீங்க. இத்தனை வருடங்கள் கழிந்தும் ஜெயம் ரவி என அழைக்கிறார்கள்.. ஏன் நேரம் அல்லது நேரமில்லை ரவி என்று மாற்றிக்கொள்ளுங்களேன் என்று கிண்டல் செய்தாராம். அனால்தான், தன்னுடைய பெயரை இப்படி மாற்றி வெளியிட்டதாக கூறுகிறார்கள்..












Click it and Unblock the Notifications