மகன் பிறந்தநாளில் ஆர்த்தி ரவியின் உணர்வுபூர்வமான பதிவு! ஆனால்! ரவி மோகன் செய்த செயல்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: வெள்ளித்திரை பிரபலங்களான ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் ஆர்த்தி தம்பதியர், தங்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட இடைவெளியால் பிரிந்து வாழ்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, ரசிகர்கள் தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையை ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள். இந்நிலையில், ஆகஸ்ட் 10-ம் தேதி, அவர்களின் இரண்டாவது மகனின் பிறந்தநாள் என்பதால், ஆர்த்தி தனது மகனுக்காக ஒரு உணர்வுபூர்வமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.

ஆர்த்தியின் நெகிழ்ச்சியான பதிவு
ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அயானுக்கு வாழ்த்துச் சொல்லி, "என் பாண்டா குட்டி...கடினமாக இருக்கும்போது சிரிப்பது, அநியாயம் நடக்கும்போது பொறுமையாக இருப்பது, ஒளி ஒருபோதும் விலகாதது எனக் கூறுவதுபோலச் சிரிப்பது.. உன்னுடைய ஸ்பிரிட் அனிமல் வேறு எதுவாக இருக்கும்? 100% பாண்டா" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வார்த்தைகள், தாய்மையின் மென்மையையும், அன்பையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் வர்ணித்துள்ளனர். ஆர்த்தி என் மகனுக்கு பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள் அதே நேரத்தில் மோகன் தன்னுடைய மகனுக்காக சோசியல் மீடியாவில் ஒரு வாழ்த்து செய்தி கூட போடவில்லை. இது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ஜெயம் ரவியின் பயணம்
சினிமா அறிமுகம்: நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில், கடந்த 2003-ம் ஆண்டு வெளியான 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஜெயம் ரவியின் தந்தை, பிரபல எடிட்டர் மோகன் ஆவார். இவரது மூத்த சகோதரர், இயக்குநர் மோகன் ராஜா. ஜெயம் ரவி, தனது சகோதரரின் இயக்கத்தில் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால், அவர் 'ஜெயம் ரவி' என்று அழைக்கப்பட்டார். ஆனால் சமீபத்தில் தான் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பெயரை பிரவீன் மோகன் என மாற்றிக் கொண்டார்
திருமணம்
ஜெயம் ரவி, 2009-ம் ஆண்டு, பிரபல தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியைத் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக, அவர்கள் பிரிந்து வாழ்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, சில சர்ச்சைகளும், வதந்திகளும் வெளியாகின.
குறிப்பாக, பாடகி கெனிஷாவுக்கும், ஜெயம் ரவிக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும், அதுவே இந்த பிரிவுக்குக் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால், இவை வெறும் வதந்திகள் என்று கவி மகன் மற்றும் கெனிஷா கூறி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆர்த்தி தனது மகனுக்காகப் பகிர்ந்துள்ள இந்தப் பதிவு, ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தாய் தனது மகனைப் பார்த்து எழுதும் இந்த வார்த்தைகள், வெறும் வாழ்த்து மட்டுமல்ல, ஒரு தாயின் ஆழமான பாசத்தையும், ஒரு புதிய வாழ்க்கைக்கான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications