சிவகார்த்திகேயன் எனக்கு போட்டியா? என்கிட்ட நேரடியாக அவரே சொன்ன விஷயம் இதுதான்! ஜீவா விளக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் சமீப காலமாக இரண்டு படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ஒருபுறம் விவாதங்களை கிளப்பிக் கொண்டிருக்க, மறுபுறம் நிதிஷ் இயக்கத்தில் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் எதிர்பார்ப்பை மீறிய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது. இந்த சூழலில் ஜீவா அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அந்தப் பேட்டியில் சிவகார்த்திகேயன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஜீவா அளித்த பதில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. "நான் சினிமாவுக்கு வந்த காலகட்டத்தில் ரவி மோகன், தனுஷ், சிம்பு போன்றவர்கள் தான் எனக்கு சமகால நடிகர்கள். அவர்களையே நான் என் போட்டியாளர்களாக நினைக்கிறேன். ஆனால் சிவகார்த்திகேயனை நான் ஒருபோதும் போட்டியாக பார்த்ததில்லை" என டக்கெனு பதிலடி கொடுத்து விட்டார்.

மேலும் அவர் பேசும்போது, சிவகார்த்திகேயன் தன்னை முதன்முறையாக சந்தித்த தருணத்தை நினைவுகூர்ந்தார். "எஸ்கே என்னிடம், 'அண்ணா, உங்களுடைய படங்களை எல்லாம் பார்த்துதான் வளர்ந்தேன்' என்று சொன்னார். அந்த வகையில், நான் அவருக்கொரு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம். அதில் எனக்கு மகிழ்ச்சிதான்" என்று மனம் திறந்து கூறினார்.
சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ள நிலையில், ஜீவாவின் இந்த அணுகுமுறை ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 'அமரன்' போன்ற மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு எஸ்கே தொடர்ந்து பெரிய படங்களில் நடித்துவர, ஜீவாவுக்கு தலைவர் தம்பி தலைமையில் ஒரு முக்கியமான கம்பேக் படமாக அமைந்துள்ளது என்பதையும் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
குறிப்பாக, ஜீவா நடித்திருந்த என்றென்றும் புன்னகை படத்தின் ஆரம்ப கட்டங்களில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாகவும், பின்னர் அது நடக்காமல் போனதாகவும் சினிமா வட்டாரத்தில் ஏற்கனவே பேசப்பட்ட விஷயம். இவை எல்லாம் சேர்ந்து, "போட்டி அல்ல, பரஸ்பர மரியாதை" என்ற கோணத்தில் ஜீவாவின் பேச்சு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இளம் நடிகர்களின் வளர்ச்சியை சீனியர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதற்கான உதாரணமாக, ஜீவாவின் இந்தப் பேட்டி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications