"டாடி" ஜான் விஜய் முதல் யசோதா சுவாசிகா வரை.. பிக்பாஸ் வீட்டுக்குள் வரப்போகும் 2 ஹெவி வெயிட்ஸ்?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 10 தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த முறை வீட்டிற்குள் யார் யார் நுழைய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள இந்த சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கும் பிரபலங்களின் பெயர்கள் குறித்து சோஷியல் மீடியாவில் பல்வேறு யூகங்கள் உலா வருகின்றன. அந்த லிஸ்ட்டில் 2 பிரபலங்களின் பெயர்கள் மட்டும் இப்போது கசிந்து, ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கின்றன. அவர்கள் வேறு யாருமல்ல. நடிகர் ஜான் விஜய், நடிகை சுவாசிகா இருவரும் தான்.
பிக்பாஸ் சீசன் ஆரம்பமாக போகிறது என்றதிலிருந்தே, யார் யார் கலந்து கொள்ள வருகிறார்கள் என்ற ஆர்வம் எகிறி கொண்டிருக்கிறது.. பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாட போவது இவர்கள்தான் என்று தினம் தினம், புது புது லிஸ்ட் வெளியாகியவண்ணம் உள்ளது..

நடிகர் ஜான் விஜய், சுவாசிகா
அந்தவகையில், நடிகர் ஜான் விஜய் மற்றும் நடிகை சுவாசிகா என்று 2 பேரின் பெயர்களும் அடிபடுகிறது. இந்த பெயர்களும் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஆனால், இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார்கள் என்ற பேச்சு மற்ற போட்டியாளர்களின் பெயர்களைவிட வலுவாக அடிபட்டு வருகிறது. அதாவது, இவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு 90 சதவீதம் இருப்பதாகவே சொல்கிறார்கள்..
2 பேருமே சினிமாவில் ஏற்கெனவே தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர்கள். அதிலும், ஜான் விஜய் என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது வித்தியாசமான பாடி லேங்குவேஜ்தான்.. எந்த கேரக்டர் தந்தாலும், தனக்கே உரிய பாணியில் கையாளும் திறனை அபாரமாக பெற்றவர்..
அசத்தப்போகும் "டாடி"
வில்லன், காமெடி, கேரக்டர் என பலவிதமான வேடங்களில் நடித்து, தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.. அதிலும் சார்பட்டா பரம்பரை படத்தின் "டாடி" கேரக்டர் மூலம் இன்னொரு தலைமுறை ரசிகர்களிடமும் கவனம் பெற்றவர். நடிப்பை தாண்டி ரேடியோ விளம்பரம், சின்னத்திரை என பல தளங்களில் இயங்கிய அனுபவமும் அவருக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தால், அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பாரா என்ன? நிகழ்ச்சி நிச்சயம் பட்டாசாய் தெறித்து விடும்.
அதேபோல் சுவாசிகாவும் சாதாரணமாக கடந்து வந்த நடிகை அல்ல. ஆரம்ப காலத்தில் பல தடைகளையும் தோல்விகளையும் சந்தித்தவர். வாய்ப்புகளுக்காக ஆடிஷன்களில் அலைந்து, டிவி வழியாக தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக்கொண்டார்.
லப்பர் பந்து, நூறு சாமி சுவாசிகா
பிறகு லப்பர் பந்து படத்தின் யசோதா கேரக்டர் அவரது நடிப்பை ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றது. இயல்பான நடிப்பு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் என தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருக்கிறார். இப்போது சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் "நூறு சாமி" படம், சுவாசிகாவுக்கு மற்றொரு மகுடமாக அமைந்துள்ளது.
இப்போது இந்த இருவரும் ஒரே வீட்டுக்குள் இருந்தால் எப்படி இருக்கும்? ஜான் விஜய்யின் காமெடி பேச்சும் அனுபவமும் ஒரு பக்கம், சுவாசிகாவின் இயல்பான அணுகுமுறையும் உணர்ச்சிப்பூர்வமான வெளிப்பாடும் இன்னொரு பக்கம் என வீடு களைகட்ட நிறையவே சான்ஸ் இருக்கு..
2 பிரபலங்கள்
குறிப்பாக டாஸ்க், கருத்து மோதல், நட்பு, மனஸ்தாபம் என பிக்பாஸ் வீட்டில் உருவாகும் ஒவ்வொரு சூழலிலும் இவர்களின் தனித்துவமான ஆளுமை எப்படி வெளிப்படும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுவரை வெளியானது எல்லாமே யூகங்கள்தான். ஆனால் ஜான் விஜய், சுவாசிகா ஆகிய 2 பெயர்களும் இவ்வளவு வலுவாக அடிபடுவது மட்டும் பிக்பாஸ் ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது. உண்மையிலேயே இந்த இருவரும் அந்த வீட்டின் கதவைத் திறந்து உள்ளே வந்துவிட்டால், இந்த சீசனின் சுவாரஸ்யத்திற்கு அளவே இருக்காது என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்...!!!


Click it and Unblock the Notifications
