மாதம்பட்டி ரங்கராஜ் போட்ட போஸ்ட்.. என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்! ஜாய் அனுப்பிய நோட்டீஸ்! புது பிரச்சனை
சென்னை: சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோருக்கு இடையேயான இரண்டாம் திருமணச் சர்ச்சை நாளுக்கு நாள் சட்டப் போராட்டமாக வலுத்து வருகிறது. ரங்கராஜ் நீதிமன்றத்தை மட்டுமே நம்பி அறிக்கை வெளியிட்ட நிலையில், இப்போது ஜாய் கிரிஸில்டா தரப்பில் இருந்து ரங்கராஜுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்குடன்தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி, சர்ச்சையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

சர்ச்சையின் பின்னணி
சமூகத்தில் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ், முதல் மனைவி இருக்கும்போது விவாகரத்து கூடப் பெறாமல் தன்னைத் திருமணம் செய்துகொண்டு இப்போது ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஜாய் கிரிஸில்டா ஏற்கெனவே சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் ஆகியவற்றில் ரங்கராஜ் மீது திருமண மோசடிப் புகார்களை அளித்துள்ளார். குறிப்பாக, தன்னைப் போல 10 பெண்களை அவர் ஏமாற்றி இருப்பதாகக் கூறி, மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ரங்கராஜின் அறிக்கை
இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில், ரங்கராஜ் ஒரு பக்கம் அறிக்கை வெளியிட்டு, "தனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது என்றும், உண்மை சட்டப்படியே நிலைநாட்டப்படும்" என்றும் கூறியிருந்தார். மேலும், "ஜாய் கிரிஸில்டா எதிர்பார்ப்பது போல நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்வு காண ஒருபோதும் விரும்பவில்லை" என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
ஜாய் கிரிஸில்டாவின் பதிலடி
ரங்கராஜ் அறிக்கை வெளியிட்ட சில மணி நேரங்களில், ஜாய் கிரிஸில்டா சமூக வலைதளத்தில், "சட்டத்திற்கு முன் நீங்கள் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது Husband @MadhampattyRR" என்று ஒரு வரியில் பதிலடி கொடுத்திருந்தார்.
லீகல் நோட்டீஸ்
மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கையில், "நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு இல்லை" என்று உறுதியாகக் கூறியிருந்த நிலையில், இப்போது ஜாய் கிரிஸில்டா தரப்பில் இருந்து அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோட்டீஸின் நோக்கம்
ஜாய் கிரிஸில்டா சார்பில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸின் முக்கிய நோக்கம், பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள அணுகியதாக மாதம்பட்டி ரங்கராஜ் பேசியிருக்கும் நிலையில், ஜாய் தரப்பில் அந்த அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்பி பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். தவறினால் உரிமையியல், குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்று ஜாய் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications