அந்தரங்க வீடியோ அசிங்கம்.. அப்போ ஜாய் கிறிஸில்டா நோக்கம் என்ன? ஜூடிஷியல் செப்பரேஷன் இதுதான்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜூடன் 2வது திருமணம் நடந்ததாக சொல்லும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரீஸில்டாவின் நோக்கம் என்ன? கணவருடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் பெண், அந்தரங்க வீடியோக்களை பொதுவெளியில் வெளியிடுவார்களா? இதையே சுருதி செய்வாரா? எந்த மனைவியும் கணவரை அசிங்கப்படுத்த நினைக்கவே மாட்டாங்க.. எனவே, ஜாயின் நோக்கம் பணம் மட்டுமே" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, ஜாய் கிரிஸ்டில்லா, மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி என்கிறார்.. ஆனால் ஜாய் இரண்டாவது மனைவியே கிடையாது.. இதுதான் உண்மை..

Television Joy Crizildaa Madhampatti Rangaraj

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, அவரை விவாகரத்து செய்யாமல், இருக்கும்பட்சத்தில், இன்னொரு திருமணத்தை செய்ய முடியாது.. அப்படியே செய்தாலும் அந்த திருமணம் செல்லாது..

ஜாய் ஒரு ஃபேஷன் டிசைனர்.. பல திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.. அதேபோல சமையல் கலைஞராக இருந்தே பல கோடிகளை சம்பாதித்துவிட்டவர் மாதம்பட்டி ரங்கராஜ்.. இந்தியா முழுவதும் அறிந்த கலைஞராக உள்ளார்..

மாதம்பட்டி ரங்கராஜ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், தனக்கு ஆடை வடிவமைப்பாளரான ஜாயை சந்தித்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.. அப்போதுதான் இருவரும் நெருங்கி பழகியிருக்கிறார்கள்.. மாதம்பட்டி ரங்கராஜூடன் சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள ஒரு கோயிலில் தங்களுக்கு திருமணம் முடிந்ததாகவும் ஜாய் சொல்கிறார்.. மணக்கோலத்தில் இருந்த போட்டோக்களையும் ஜாய் வெளியிட்டிருந்தார்.. அப்போதே இது பெரிய பேச்சுப்பொருளாக மாறியது.

மனைவி, குழந்தைகளுக்கு துரோகம் செய்துவிட்டு, இப்போது 7 மாத குழந்தை வரை இந்த விவகாரம் சென்றுள்ளது என்றால், இதில் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் என 2 பேர் மீதுமே தவறு உள்ளது..

படிக்காத கிராமத்து பெண்

பொன் மகள் வந்தாள் படத்தின் டைரக்டரை ஏற்கனவே திருமணம் செய்துள்ளார் ஜாய்.. அவரை விவாகரத்தும் செய்துள்ளார்.. இவர்களுக்கு குழந்தையும் உள்ளது.. அப்படியிருக்கும்போது, கல்யாணம் என்றால் என்ன, தாம்பத்யம் என்ன, விவாகரத்து என்றால் என்ன? இது எல்லாமே ஜாய்க்கு நன்றாகவே தெரியும்.. அதேபோல படிக்காத கிராமத்து பெண்ணும் கிடையாது ஜாய்.. அப்பாவி பெண்ணும் கிடையாது..

நன்றாக படித்த, 40 வயது பெண்மணிக்கு, எதுவுமே தெரியாது என்று சொல்ல முடியாது. மாதம்பட்டிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தும், அவரை மீண்டும் திருமணம் செய்ததற்கு என்ன காரணம்?

ஜூடிஷியல் செப்பரேஷன் என்ற வார்த்தையை தன்னிடம் மாதம்பட்டி பயன்படுத்தியதாக ஜாய் சொல்கிறார்.. ஜூடிஷியல் செப்பரேஷன் என்றால் என்ன?

கணவன் மனைவி மனமுறிவு

கணவன் மனைவிக்குள் மனமுறிவு இருந்து ஒருவரையொருவர் பிரிய நினைத்தால், இவருமே நீதிமன்றத்தை நாடுவார்கள்.. அதாவது சமுதாயத்துக்காக கணவன் மனைவியாக இருந்துக்கொண்டு, அதேசமயம் இருவருமே தனித்தனியாக வேறு வேறு வீடுகளில் பிரிந்து வாழ்வது.. இதற்கு பெயர்தான் ஜூடிஷியல் செப்பரேஷன் என்பார்கள்..

நீதிமன்றம் பிரிவின்கீழ் தம்பதி இருவரும் தனித்தனியாக வாழ்வார்கள்.. தம்பதி இருவரும் பிரிந்திருக்கதான் கோர்ட் அனுமதிக்குமே தவிர, விவாகரத்து செய்ய அனுமதி தரவில்லை. எனவே தம்பதி விவாகரத்து செய்து கொள்ளவில்லை என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்..

ஜூடிஷியல் செப்பரேஷன்

இந்த ஜூடிஷியல் செப்பரேஷன் தனக்கு நடந்துவிட்டதாக ஜாயிடம் மாதம்பட்டி சொன்னாராம்.. அப்படி ஜூடிஷியல் செப்பரேஷன் நடந்திருந்தால் கோர்ட்டில் அதற்குரிய ஆவணம் தரப்படும்.. அந்த ஆவணம் எங்கே? என்று ஆரம்பத்திலேயே ஜாய், மாதம்பட்டியிடம் கேட்டிருக்கலாமே? ஜூடிஷியல் செப்பரேஷன் நடந்தாலும் மறுமணம் செய்யமுடியாது என்று ஜாய்க்கு ஏற்கனவே தெரியும். அப்படி தெரிந்தும் ஏன் திருமணம் செய்தார்?

கோயிலில் திருமணம் செய்ததாக சொல்கிறார்.. இந்து அறநிலையத்துறைக்கு கீழ் வரும் கோயில்களில்தான், திருமணம் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும்.. அந்தவகையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படும் கோயிலும், இந்து அறநிலையத்துறையின் கீழ் வருகிறதா? என்பதையும் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பிளாக்மெயில் வீடியோ

சுருதிக்கு துரோகம் செய்தவர் ஜாய்.. நல்ல நோக்கத்துடன் மாதம்பட்டியை அடைய வேண்டும் என்று நினைத்திருந்தால், முதல் மனைவியை முதலில் விவாகரத்து செய்துவிட்டு வரும்படி சொல்லியிப்பார். வயிற்றிலுள்ள கருவை கலைக்காமல் இருந்துவருவதன் உள்நோக்கம் என்ன? வயிற்றிலுள்ள குழந்தையை காட்டி, பிளாக்மெயில் செய்யணுமா?

ஜாய் போலீஸில் தந்துள்ள புகார் எதுவுமே செல்லுபடியாகாது.. ஆனால் குழந்தை மாதம்பட்டி ரங்கராஜூடையது என்றால், அந்த குழந்தைக்கு கல்வி, சொத்து, பாசம் முதல் அனைத்தையும் செய்ய வேண்டியிருக்கிறது.. முறையற்ற வழியில் பிறந்தாலும், மாதம்பட்டி ரங்கராஜுடைய குழந்தை என்பது நிரூபணமாகிவிட்டால், அந்த குழந்தைக்கு சட்டப்படி எல்லாவிதமான உரிமையும் உண்டு" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

பணம் மட்டுமே பிரதானம்

பொண்டாட்டி என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூப்பிட்டு பேசும் வீடியோ ஒன்றை ஜாய் வெளியிட்டுள்ளார்.. இந்த பெண்ணை நம்பிதானே அவர் வீடியோவில் பேசியிருப்பார்? நாலு சுவற்றுக்குள் நடந்த அந்த பிரைவேட் வீடியோவை பொதுவெளியில் வெளியிடுகிறார் என்றால், ஜாயின் எண்ணம் என்ன?

கணவருடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் பெண் இப்படி செய்யவாரா? இதையே சுருதி செய்வாரா? எந்த மனைவியும் கணவரை அசிங்கப்படுதத நினைக்கவே மாட்டாங்க.. எனவே, ஜாயின் நோக்கம் பணம் மட்டுமே" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+