அள்ளி முடித்த கொண்டயோடு வெட்கத்தை சிந்திய ஜூலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதுமே இது மட்டும் தான் என்னை விட்டுப் போகாது என சிரிப்பிற்கு புது விளக்கத்தைக் கொடுத்துள்ளார் பிக் பாஸ் புகழ் ஜூலி.

நான் சிரித்துக்கொண்டே கஷ்டங்களை மறந்து விடுவேன் என வெட்கத்தை சிந்திய ஜூலியின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்களும் செம ஹேப்பி ஆகியுள்ளனர்.

கத்திரி வெயில் ஒருபுறம் பாடாய்ப்படுத்துகிறது என்றால் மறுபுறம் இந்த கொரோனாவின் கோரத்தாண்டவம் பாடாய்படுத்தி வருகிறது .

அலுத்துக் கொள்ளும் வாழ்க்கை

அலுத்துக் கொள்ளும் வாழ்க்கை

இருக்கிற பிரச்சினை போதாது என்று நாளுக்கு நாள் புதுப்புது பூஞ்சைகளும் புதுசு புதுசான கலரில் பாடாய்படுத்தி வருகிறது .என்னடா வாழ்க்கை என அலுத்துக் கொண்டு இருக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு எல்லாமே தற்போது இணையதளங்கள் தான் .முன்பெல்லாம் டிவி முன்பு அனைவரும் தவம் கிடந்தனர். ஆனால் தற்போது ஒரு ஸ்மார்ட்போனுக்குள் உலகத்தையே அடக்கிவிட்டனர்.

செல்லில் அடங்கிய உலகம்

செல்லில் அடங்கிய உலகம்

பிறகு எதற்கு டிவி என்று வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் டிவியை ஒப்படைத்துவிட்டு இளைஞர்களும் குழந்தைகளும் செல்போனை முழுநேரமாக பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் அதிகமான ரசிகர்களும் இளைஞர்களும் படுத்துவது இன்ஸ்டாகிராம் தான் அந்த இன்ஸ்டாகிராமில் சீரியல் நடிகைகள் முதல் சினிமா நடிகைகள் வரை கலக்கி கொண்டிருக்கின்றனர்

கொஞ்சும் ரசிகர்கள்

கொஞ்சும் ரசிகர்கள்

என்னதான் பலர் போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தாலும் பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் அதிகமாக இருந்து வருகின்றனர் .ஒருபுறம் ரசிகர்கள் கமெண்ட்களால் கொஞ்சுகின்றனர் .மறுபுறம் நெட்டிசன்கள் கலாய்த்து அவரைப் பாடாய்ப்படுத்தி வருகின்றனர் .ஆனால் எதற்கும் நான் அசரமாட்டேன் என அவரும் போல்டாக தான் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜல்லிக்கட்டு மூலம் பிரபலம்

ஜல்லிக்கட்டு மூலம் பிரபலம்

ஜூலி பிக்பாஸ்க்கு முன்னாடி ஜல்லிக்கட்டில் பேமஸ் ஆகி இருந்தாலும் பிக்பாஸ் மூலமாக ரொம்பவே பேமஸ் ஆகிவிட்டார் .ஆனால் இந்த நிகழ்ச்சி முடிந்து பல வருடங்கள் ஆனாலும் அதற்குப் பிறகு இவர் மாடலிங்கில் கலக்க ஆரம்பித்து விட்டார் .இவர் பல விளம்பரங்களில் மாடலாக ஜொலித்துக் கொண்டிருந்தாலும் சினிமாவில் நடிப்பதற்காக முழு முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறார் .

கமெண்ட் போட்டால் கவலை இல்லை

கமெண்ட் போட்டால் கவலை இல்லை

அதற்காக பார்த்து பார்த்து போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருக்கும் இவர் தற்போது விஜய் டிவியில் மீண்டும் பிக்பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் இவருக்கு ரசிக்கும் ரசிகர்களை விடவும் கலாய்க்கும் நெட்டிசன்கள் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் அதில் நுழைந்து இவரை கன்னாபின்னாவென கலாய்த்து அவரைக் காண்ட் ஆக்கிவிடுகின்றனர்.

ஜாலியான ஜூலி

ஜாலியான ஜூலி

இதனால் டென்ஷனான ஜூலி அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவர்களுக்கு நறுக்கென்று பதிலளித்து வருகிறார். என்னதான் இவர் பதிலளித்து வந்தாலும் மீண்டும் மீண்டும் அதே போலவே செய்து வருவதால் தற்போது உங்க இஷ்டத்துக்கு நீங்க என்ன வேணும்னாலும் பேசிக்கிட்டு போங்க என சிரித்துக்கொண்டே தன்னைப் பற்றி பேசும் நெகட்டிவ் கமெண்டுக்கு தள்ளிவிட்டு போய்க் கொண்டே இருக்கிறார்.

சிம்பிள் வெட்கம்

சிம்பிள் வெட்கம்

அந்த மாதிரிதான் தற்போது இவர் இதுவரைக்கும் மேக்கப் ஜொலித்து கொண்டிருந்தவர் தற்போது எந்த மேக்கப்பும் போடாமல் சிம்பிளாக வெட்கப்பட்டுக் கொண்டு கண்களில் வெட்கத்தை சிந்தியபடி ஒரு போட்டோவை எடுத்திருக்கிறார் .இதைப் பார்த்ததும் குஷியான அவருடைய ரசிகர்கள் கவிதைகளை பொழிந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+