உடைந்தது ஜோதிகா ஃபேமிலி? சிவகுமாரின் சர்ச்சை.. பழைய பேச்சை வைத்தே சூர்யாவுக்கு ஸ்கெட்ச்: பிரபலம்
சென்னை: சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கங்குவா பட தோல்விக்கு பிறகு, ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டார் சூர்யா. ஆனால் ரெட்ரோ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மற்றொருபுறம் சூர்யாவுக்கு எதிராக சில சக்திகள் வேலைபார்ப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ரெட்ரோ படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, "இந்த ரெட்ரோ படத்தில் சூர்யா, டான்ஸ், ஆக்ஷன், சண்டை எல்லாமே சிறப்பாக செய்திருக்கிறார்.. பண்பட்ட நடிகருக்கான நடிப்பை பார்க்க முடிகிறது.. இது தமிழ் சினிமாவின் சாதாரண கதை என்றாலும், அந்த கதைக்குள் ஒரு மேஜிக் செய்துள்ளார்கள்..

கலவையான விமர்சனம்
சூர்யாவுக்கான விஷயங்கள் இந்த படத்திலும், இது கார்த்திக் சுப்புராஜின் படம் என்பது பளிச்சென தெரிகிறது. கலர்புல் படமாக உள்ளது.. குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.. நல்ல தரமான படத்தை தந்துள்ளார்.. மொத்தத்தில், நல்ல நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கலெக்ஷன் பெரிய அளவுக்கு இருக்க போகிறது" என்று பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகின.
மற்றொருபுறம், ரெட்ரோ படத்தில் பாராட்டத்தக்க சில அம்சங்கள் இருந்தாலும், சூர்யா ரசிகர்களை கூட இந்த படம் திருப்திபடுத்தவில்லை என்ற எதிர்மறை விமர்சனங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன.. அதாவது, முதல் பாதி குறை எதுவும் இல்லாத வகையில் சுவாரஸ்யமாக நகர்ந்துள்ள நிலையில், 2ம் பாதி ஒட்டுமொத்த படத்தையும் கீழே கொண்டு போய் விட்டதாக சொல்கிறார்கள். சூர்யா கடுமையாக உழைத்திருந்தாலும், அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளதாக தெரிகிறது என்று நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
நெகடிவ் விமர்சனங்கள்
இந்நிலையில், King Voice என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "கங்குவா படத்துக்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் நிறைய வந்தது உண்மையே.. ஆனால், ரெட்ரோ படத்தில் சூர்யா நன்றாகவே உழைத்துள்ளார்.. அவருடைய பங்கை சிறப்பாக செய்துள்ளார்.. இந்த படம் கருத்தியல் ரீதியான தோல்வியா? கமர்ஷியல் ரீதியான தோல்வியா என்பது விவாதிக்கக்கூடிய விஷயம்.
ஆனால், இந்த ரெட்ரோ படத்தை மொக்கை என்று விமர்சிப்பதற்கு முன்பு மனசாட்சி வேண்டும். மொத்தம் 24 கிராஃப்ட் வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.. காதல் கதையோடு சேர்த்து ஆக்ஷன் படமாக தர முயன்றுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். சில சமயம் கதையை சொல்லும்போது ஒருமாதிரியும், அதையே படமாக எடுக்கும்போது வேறு விதமாகவும் மாறிவிடும்.
பிரகாஷ்ராஜ், நாசர்
இடைவேளை வரை இந்த ரெட்ரோ படம் நன்றாகவே இருக்கிறது. அதற்கு பிறகுதான் எந்த பக்கம் கதையை கொண்டு போவது என்று தெரியாமல் திகைத்தது போல இருக்கு.. அதேபோல, வேண்டுமென்றே சில காட்சிகள் திணிக்கப்பட்டது போலவும் இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் எதுக்காக? நாசர் எதுக்காக? ஜெய்ராம் என்னென்னமோ செய்தும் சிரிப்பு வரல. இவர்கள் மூவருமே கைதேர்ந்த சீனியர் நடிகர்கள். ஆனால், இவர்களுக்கு படத்தில் பெரிதாக ஸ்கோப் இல்லை.
மாறி மாறி படத்தை எடுத்துள்ளனர்.. நடிகர்களை தேர்வு செய்த விதமும் தவறாகவே உள்ளது. இதெல்லாம் ரெட்ரோ படத்தின் தோல்விக்கான காரணங்களாக சொல்ல முடியுமே தவிர, ஒரு படத்தயாரிப்பாளராகவும், நடிகராகவும், சூர்யா மீது எந்த தவறும் இல்லை.. இது சுமாரான படம் என்று சொல்லலாம்.. அதற்காக வேண்டுமென்றே இந்த படத்தை தோல்விப்படம் என்று சொல்லக்கூடாது.
ஜோதிகாவால் வந்த வினை
அதுமட்டுமல்லாமல், அன்று சூர்யா என்ன சொன்னார்? ஜோதிகா என்ன பேசினாங்க? ஜெய்பீம் விவகாரத்தில் என்ன நடந்தது? என்ற பழைய கதைகளை வைத்து, இப்போது வரும் சூர்யா படங்களுடன் முடிச்சு போடக்கூடாது.
ஜெய்பீம் விவகாரம் அப்போதே முடிந்துபோய்விட்டது.. ஜோதிகா பள்ளிக்கூடம் கட்ட சொன்னது நல்ல கருத்துதான் .. அதை சொன்ன இடம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம்.. அதுக்காக ஒருவரின் பேச்சை வைத்து, எப்போதுமே அவர்களை டார்கெட் செய்வது ஏற்புடையதல்ல.
சிவக்குமார் சிக்ஸ்-பேக்
சிவக்குமார் சமீபத்தில் பேசிய சிக்ஸ் பேக் விவகாரமும் அன்றைய தினத்துடன் முடிந்துவிட்டது. அதையே வைத்துக் கொண்டு, ரெட்ரோ படத்துடன் ஒப்பிடக்கூடாது. இத்தனைக்கும் கங்குவா அளவுக்கு ரெட்ரோவுக்கு யாருமே ஓவர்பில்டப் தரவுமில்லை.. அப்படியிருக்கும்போது, சூர்யா மீது எதிர்மறை விமர்சனங்களை சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு வைத்து வருகிறார்கள். மொக்கை படம், குப்பை படம் என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்..
சூர்யாவை ஒழித்து கட்டுவதற்காகவே சிலர் பேசுகிறார்கள்.. சூர்யாவுக்கு எதிராக சில அரசியல் சக்திகளும், சினிமாவிலிருந்தே சூர்யாவை ஓரம்கட்ட, சில திரைப்பட பிரமுகர்களும் பின்னணியில் உள்ளனர்.. அதனால்தான், திட்டமிட்டே ரெட்ரோ படத்தை சோஷியல் மீடியாவில் கலாய்த்து வருகிறார்கள். இது மிகவும் தவறானது" என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications