ஜோதிகா, சூர்யா அங்கே போய் விழுந்துட்டாங்க! டக்னு பார்த்தால் லைஃப்பையே காணோம்: கருப்பு வரான்: பிரபலம்
சென்னை: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் 'கருப்பு'.. இந்த படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.. சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரிக்கும் இந்த படத்தின் டீசர், சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியாகியிருந்தது.. இந்த படம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், "நல்ல இயக்குனர்கள், நல்ல திரைக்கதை, வசனம் எழுதக்கூடியவர்கள் சூர்யாவுக்கும் கிடைக்கவில்லை, ஜோதிகாவுக்கும் கிடைக்கவில்லை..
காரணம், கதை இலாகா தேர்வு மட்டுமே வெற்றியை முடிவு செய்யும்..

அந்தவகையில், கங்குவா, ரெட்ரோ இரண்டுமே கதையே இல்லை. இரண்டுமே காப்பியடித்த கதைகள், பல கோடிகள் செலவும்கூட.. திரைத்துறையை அப்படியே உள்வாங்கியவர்கள் யாருமே சூர்யா, ஜோதிகாவுக்கு கிடைக்கவில்லை.. எனவே, திரைப்படம் பற்றிய பார்வையில் பெரிய இடைவெளி உள்ளது..
சூர்யா ஜோதிகா
சமூகத்தையும், மக்களின் மனநிலைமையும் தெரிந்து கொள்ளாமல் படம் எடுத்தால் எப்படி ஓடும்? புது டைரக்டர் டூரிஸ்ட் ஃபேமிலி பட்டிதொட்டியெங்கும் ஓடுகிறதே.. இன்று லண்டனில் அந்த படத்தை பற்றி பேசுகிறார்கள்.. சிந்திக்க வைத்தது ஒரு புது இயக்குனர்.. இது ஏன் ஜோதிகா, சூர்யாவால் முடியவில்லை.. திரைப்படத்துறை இனத்திலிருந்து, தொலைதூரத்தில் அப்பால் இருக்கிறார்கள்..
சூர்யா-ஜோதிகா மும்பைக்கு சென்று செட்டிலாகிவிட்டதால் படம் ஓடவில்லை என்பதை ஏற்கமுடியாது.. லண்டனில் உட்கார்ந்து லைகா படம் எடுக்கிறார்... எனவே இடம் ஒரு காரணம் இல்லை.. எந்த தொழிலையுமே நேசித்து, யோசித்து செய்ய வேண்டும்.. அது இல்லாததுதான், இவர்களை அந்நியப்படுத்திவைத்துவிட்டது.
சிவக்குமார் கிசுகிசுக்கு அப்பாற்பட்டவர்
நடிகர் சிவக்குமார் நீண்ட நெடிய வரலாறு கொண்டவர்.. எந்த கிசுகிசுவும் அவரை நெருங்கியதில்லை.. அவருடைய மகன் சூர்யா, தந்தையின் பெயரை காப்பாற்ற வேண்டும்.. தன்னுடைய படங்களில் கவனம் செலுத்துவதில்லை.. டைரக்டரை நம்பினாலும் பெரிய இழப்பு வராது, தயாரிப்பாளர்தான் தெருவில் வந்துவிடுவார்கள்.. பெரும்பாலான படங்கள் சூர்யாவின் சொந்த தயாரிப்பாகவே உள்ள நிலையில், அதிகப்படியான கவனத்தை அவர் செலுத்தியிருக்க வேண்டும்.
புரமோஷன், மக்களின் மனநிலைமை இவைகளையும் ஆராய வேண்டியிருக்கிறது.. அந்தவகையில், இதில் 100 சதவீதம் இதில் வெற்றி பெறுவது சன் பிக்சர்ஸ் ஆக உள்ளது.. எனவே, ஜோதிகா, சூர்யா இருவருமே இனிமேலாவது, மக்களின் மனநிலைமையை நாடிப்பிடித்து பார்க்க வேண்டும்.
கருப்பு படம்
ஆர்ஜே பாலாஜி மீது ஏற்கனவே கதை திருட்டு புகார் உள்ளது.. அவரிடம் கருப்பு படம் மூலமாக, ஜோதிகா, சூர்யா இருவரும் நம்பி சென்றதே தவறானது.. யாருமே இன்று கிரியேட்டிவ் டைரக்டர்கள் கிடையாது.. அட்லியை எடுத்துக் கொண்டால், நாலஞ்சு படத்தை எடுத்து வெட்டி ஒட்டிவிடுவார்.. அதுதான் அட்லி எடுக்கும் படம்.. அவரும் இப்போது பாலிவுட் வரை சென்றுள்ளார்.. டாக்டர் பட்டம் வரை வாங்கிவிட்டார்..
ஏசி சண்முகத்திடம் சென்றால், யாருக்கு வேண்டுமானாலும் டாக்டர் பட்டம் தந்துடுவார்.. டாக்டர் பட்டங்களை கையிலேயே ரெடியாக வைத்திருப்பார்.. பல பல்கலைகழக வேந்தர்கள் இப்படித்தான் இருக்காங்க..
தமிழில் நல்ல படங்களை பார்த்து பல வருடங்களாகிவிட்டது. காய்ந்துபோன திரைத்துறையை ஏதாவது ஒரு இயக்குனர் சரிசெய்ய வேண்டும்..
தக் லைஃப் - காணாமல் போன லைஃப்
கமல் நல்ல கலைஞன் என்பதில் சந்தேகமில்லை.. தக்லைஃப் எடுத்தார், டக்குனு பார்த்தால் லைப்பையே காணோம்.. மணிரத்னம், கமல், சிம்பு போன்றோர் நல்ல கலைஞர்களாக இருந்தும், கதையில் கவனத்தை செலுத்தவில்லை.. 300 கோடி லாஸ்.
சூர்யாவின் கருப்பு படம் வரப்போகிறது.. ஆரம்பத்திலேயே நாம் அந்த படத்தை விமர்சனம் செய்யக்கூடாது.. அதை ப்ளூ சட்டை மாறனிடம் விட்டுவிடுவோம்.. ஆனால், இனி தயாரிப்பாளர்கள், கதையில் கவனம் செலுத்த வேண்டும்..
கதை இலாகா அவசியம்
அன்று சாண்டோ சின்னப்பா தேவர், படங்களை தயாரித்தபோது, "கதை இலாகா" என்று தனியாகவே ஒரு இலாகா வைத்திருந்தார்.. அவர்களை கேட்டுத்தான் படங்களை எடுப்பார்.. இன்று ஒருவர் வளர்ந்ததுமே அகங்காரம் தலையில் சேர்ந்துவிடுகிறது.. அசிஸ்டெண்ட் டைரக்டர்களுடன் உட்கார்ந்து ஆலோசிப்பதில்லை..
உலகமே அஞ்சி நடுங்கிய ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்த லெனினை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.. தீர்மானங்களை இயற்றும்போது, வெளியில் நின்றுள்ள கடைநிலை ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களை கூப்பிட்டு, உங்களது பிரச்சனைகளை சொல்லுங்கள் .. அதையே சட்டமாக்குகிறேன் என்பாராம்.
இதுபோன்ற எளிமையான மனிதர்கள்தான், இன்று அரசியலுக்கும் தேவை, சினிமாவுக்கும் தேவை" என்றார்.












Click it and Unblock the Notifications