Kaappaan Film: காப்பானுக்கு பிறகு சூர்யா வேற லெவலா?
சென்னை: சன் டிவியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக காப்பான் படத்தின் கலைஞர்களுடன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து ஒளிபரப்பி இருந்தார்கள்.
நடிகர் சூர்யா, இயக்குநர் கே.வி.ஆனந்த் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். காப்பான் படத்துக்கு பிறகு சூர்யா வேற லெவல் எனும் அளவுக்கு அவரிடம் பக்குவம் தெரிகிறது.
சூர்யாவின் பெங்களூரு ரசிகர்கள் வருகை, நம்ம ஊர் விவசாயி ஒருவரை வரவழைச்சு கவுரவித்து இருந்தது என்று நிகழ்ச்சி நன்றாக இருந்தது.

காப்பான் அர்த்தம்
காப்பான் என்றால் காப்பவன் என்று அர்த்தம். நாட்டின் எல்லையில் நின்று காப்பவனும் காப்பான், விவசாயத்தை காப்பவனும் காப்பான்.இப்படி நாட்டுக்கு தேவையான எதை ஒருவன் காத்து அதற்கான பணிகளை செய்கிறானோ, அவர்கள் எல்லாம் காப்பான்களே என்று கூறினார் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த்.படத்தில் நடிக்கற சூர்யா விவசாயியாக நடிக்கிறார்.

கண்ட சூர்யாவை
ஆஃபீஸுக்கு போயிகிட்டு இருந்த சூர்யாவை நேருக்கு நேர் படத்தில் நடிக்க வைக்க அழைச்சுக்கிட்டு வந்து, என்கிட்டே ஒப்படைத்தார் இயக்குநர் வசந்த்.நான்தான் மேக் அப் போட்டு ஸ்டில்ஸ் எடுத்தேன்.அப்போது இருந்தே எனக்கும், சூர்யாவுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது என்றும் கே.வி.ஆனந்த் கூறினார்.

சாயிஷா ஆர்யா
லண்டனில் ஷூட்டிங், அங்கு வட நாட்டு பையன் போல நடிக்க ஆள் தேவைப்பட்டது. அதே மாதிரி ஒரு பெண்ணும் தேவைப்பட்டது. லண்டனுக்கு விசா இருக்கும் நடிகர் கிடைப்பது என்பது அரிதானது. ஆர்யாவிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்டபோது, அவருக்கு அஞ்சு வருஷத்துக்கு லண்டன் விசா இருக்குன்னு சொன்னார்.இப்படி நடிக்க ஆள் தேவை.. இன்னும் ஓரிரு நாட்களில் ஷூட்டிங்ன்னு சொன்ன அடுத்த நிமிடம், அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு உங்களுக்கு தோணுதான்னு கேட்டார்.நானும் ஆமாம் என்று சொன்ன பிறகு..நீங்க ஷூட்டிங்கில் இருக்கீங்க போல..ஒரே சத்தமா இருக்கு.வைங்க நான் வந்துடறேன்னு சொல்லி வந்துட்டார் என்றும் கே.வி.ஆனந்த் சொன்னார்.

ஆர்யா சாயிஷா
ஆர்யா அடுத்து சாயிஷாவும் அப்படித்தான்.அவர் குழந்தை நட்சத்திரமா இருந்ததில் இருந்தே நடிக்கிறார். சொன்னவுடனே கப்புன்னு பிடிச்சுக்குவார் என்றும் கூற, ஆர்யாவும், சாயிஷாவும் நடிப்பதை பார்த்த பிறகு, உங்களுக்கு ஜோ நினைவு வந்து இருக்குமே..என்ன தோணுச்சு சார் உங்களுக்கு என்று சூர்யாவிடம் கேட்டபோது, நான் மும்பையிலிருந்து ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வீட்டில் வச்சு இருக்கேன். இப்படி இப்படி பார்த்துக்கணும்னு ரெண்டு பேருக்கும் கிளாஸ் எடுத்தேன்னு சூர்யா சொன்னார்.

சூர்யா பேச்சு
மோகன் லாலுடன் நடிக்கும்போது எனக்கு ஒரு டயலாகப் பேசுவதற்கே கூச்சமா இருந்துச்சு.என் கூச்சத்தை போக்கி சகஜமாக நடிக்க வச்சார். அவர்கிட்டே நன் ஜூனியர் கூட நடிக்கும்போது எப்படி இருக்கணும்னு கத்துக்கிட்டேன் என்று கூறினார்.ரசிகர்களை பெருமைப்படுத்தி பேசினார். சூர்யாவின் பேச்சு எப்போதும் ஆர்டிஸ்டிக்கா இருக்கும். இந்த முறை இயல்பாக பேசினார். நிச்சயம் காப்பானுக்கு பிறகு சூர்யா வேற லெவல்னுதான் சொல்லணும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications