காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம்
சென்னை : 90ஸ் சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் ஆன காதலர் தினம் படத்தில் கதாநாயகியாக நடித்த சோனாலி குறித்து தற்போது வெளியாகியுள்ள ஒரு நில விவகாரம், திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஒருபுறம் சட்ட விசாரணை, மறுபுறம் ரசிகர்களின் அதிர்ச்சி-இரண்டுமே சேர்ந்து இந்த விவகாரம் அதிக கவனம் பெற்றிருக்கிறது.

நில சர்ச்சை
புனேவை சேர்ந்த ஒரு விவசாயி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரது குற்றச்சாட்டு என்னவென்றால்,
தனக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக கைப்பற்ற முயற்சி நடைபெறுகிறது என்பதே.
அதில் காதலர் தினம் பட நடிகை சோனாலி பிந்த்ரே மற்றும் அவரது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறியிருப்பது இந்த விவகாரத்தை இன்னும் பெரிதாக்கியுள்ளது.
மேலும், நில உரிமை ஆவணங்களில் சந்தேகத்திற்கிடமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றும், திட்டமிட்டு நிலத்தை பறிக்க முயற்சி நடந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சோனாலியின் பதில்
இந்த குற்றச்சாட்டுகளை சோனாலி பிந்த்ரே முற்றிலும் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது, "அந்த நிலத்தை வாங்கிய எந்த ஆவணத்திலும் என் பெயர் இல்லை. எனக்கும், என் குடும்பத்தினருக்கும் அந்த சொத்துடன் எந்த தொடர்பும் இல்லை" என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை குறிவைத்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அடுத்த கட்டம் என்ன?
இந்த வழக்கு தற்போது ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளது. அடுத்த விசாரணை தேதி ஏப்ரல் 24 என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சட்ட நிபுணர்கள் கூறுவதாவது, இந்த வழக்கின் முடிவு பெரும்பாலும் ஆவணங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.
சொத்து பதிவுகள், உரிமை மாற்ற ஆவணங்கள் போன்றவை இதில் முக்கிய பங்கு வகிக்கும்.
யார் இந்த சோனாலி பிந்த்ரே?
சோனாலி பிந்த்ரே 90களில் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை. அழகு, எளிமை, இயல்பான நடிப்பு-இந்த மூன்றும் அவரை ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைநிறுத்தியது. தமிழில் "காதலர் தினம்" படத்தின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றவர். அந்தப் படத்தில் கிளைமாக்ஸ் ஆட்சியை பார்த்து இன்றும் கண்கலங்கும் பலர் இருக்கிறார்கள்.
அவர் நடித்த பல ஹிந்தி படங்கள் அப்போது பெரிய வெற்றிகளை பெற்றன. பின்னர் தயாரிப்பாளர் கோல்டி பேஹ்லை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.
ஒரு கட்டத்தில் கடுமையான உடல்நலப் பிரச்சனையையும் எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்தது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டம் தான் அதையெல்லாம் தாண்டி இப்போது அவருடைய குடும்பத்துடன் அவர் வாழ்ந்து வருகிறார் இந்த நிலையில் அவர் தற்போது சிக்கிய சர்ச்சையும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் குறித்து திரையுலகத்திலும் கலவையான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. சிலர், பிரபலங்களை குறிவைத்து இத்தகைய வழக்குகள் பதிவு செய்வது புதிய விஷயம் அல்ல என கூறுகின்றனர். இன்னும் சிலர், முழு உண்மை வெளிவரும் வரை எதையும் முடிவு செய்யக்கூடாது என எச்சரிக்கையாக அணுகுகின்றனர்.

சோனாலி பிந்த்ரே மீது வந்துள்ள இந்த நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு உண்மையா? அல்லது பொய்யா? என்பது தற்போது விசாரணை கட்டத்தில் தான் உள்ளது. ஒரு பிரபலத்தின் பெயர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த வழக்கு மீது பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இறுதியாக, நீதிமன்ற விசாரணையில் வெளிவரும் ஆதாரங்களே இந்த விவகாரத்தின் உண்மையை தீர்மானிக்கும் என்பது உறுதி.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications