சும்மா இருக்கிற.. காஜலை பொங்க வச்சுட்டாங்களே.. வந்துச்சு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தி எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் மோதிக் கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பிக் பாஸ் காஜல் பசுபதியும் இதற்குள் தலையை விட்டு தற்போது இவரை கலாய்த்த ரசிகர்களை வாங்கு வாங்கு என்று டுவிட்டரில் கமெண்ட் போட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார்.

இவர் முதல் முதலில் சன் மியூசிக் சேனலில் வீடியோ ஜாக்கியாக தோன்றினார். அதன் பிறகு சினிமாவில் நுழைந்தார்.

போல்டு கேரக்டர்

போல்டு கேரக்டர்

முதல் முறையாக டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் பிரண்ட்டாகவும் ,கோ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில், மௌனகுரு, கதம் கதம், ஆயிரத்தில் ஒருவர் என பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார். இவரது உயரத்திற்கும் வெயிட்டுக்கும் தகுந்தமாதிரி இவருக்கு வந்தது எல்லாமே போல்டான கேரக்டர் தான்.

 பிக் பாஸ் கலக்கல்

பிக் பாஸ் கலக்கல்

இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2017ஆம் ஆண்டில் ஒளிபரப்பான முதல் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டார். 54 வது நாளில் அந்த வீட்டிற்குள் சென்று 70-வது நாளில் வெளியேற்றப்பட்டார். இவர் அதிகம் விரும்புவது எதிர்மறை கமெண்ட்களையும் கேரக்டரையும் தான்.

லெவலே வேற

லெவலே வேற

எப்போதுமே யாரைப் போலவும் இருப்பது பிடிக்காதாம் எல்லோரும் ஒன்றாக நினைக்கும் போது இவரது கேரக்டர் ஆப்போசிட் டாக கருத்துக்களை பதிவிடுவார் என்றும் கூறியிருக்கிறார். இவருக்கு நடிகை சில்க் ஸ்மிதாதான் ரொம்பவும் பிடித்த நடிகை. ஆம் சில்க் வீடியோக்களை டப்ஸ்மாஷ் பண்ணி வெளியிட்டு வந்தார்.

ஆபாச கமெண்ட்

ஆபாச கமெண்ட்

இந்த நிலையில்தான் இந்தி எதிர்ப்பு கருத்துக்களில் இவரும் ஐக்கியமானார். அதில் பங்கேற்க எனக்கும் ஒரு பனியன் எனக்கும் வேண்டும் என்று கேட்டார். இதை பார்த்த சிலர் அசிங்கமாக கமெண்ட் போட..அவ்வளவுதான் பொங்கி எழுந்து விட்டார் காஜல். நெட்டிசன்கள் சிலர் போட்ட கமெண்டை படித்ததும் இவருக்கு கோபம் தலைக்கேறி விட்டது. சும்மாவே இவர் டென்ஷன் ஆனால் என்ன பண்ணுகிறார் என்று தெரியாது.

உண்டு இல்லை

உண்டு இல்லை

கோபம் வந்து விட்டார் தர லோக்கலாக இறங்கி அடிப்பார் காஜல். வறுத்து எடுத்து விடுவார். அப்படிப்பட்டவரைப் போய் அசிங்கமாக கமெண்ட் போட்டால் சும்மா விடுவாரா என்ன.. விட்டு வாங்கி விட்டார். என்ன பாஷையில் பேசினால் அவர் வருவார் என்று போட்ட கமெண்ட்டுக்குத்தான் காண்டாகி விட்டார் காஜல். அப்படிக் கேட்ட நபரை பிடித்து உலுக்கி எடுத்து விட்டார். அந்த நபர் ஓடியே போய் விட்டார்.

 நாகரீகமா பேசுங்கப்பா

நாகரீகமா பேசுங்கப்பா

நடிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் இந்தி பேசத் தெரியாது போடா என்று வசனத்தை போட்ட டீ சர்ட் அணிந்து இணையதளங்களில் போட்டோஸ்களை பரப்பி வருகிறார்கள். இன்னும் இந்த டிரெண்ட் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு காஜலும் ஆதரவு தெரிவித்துள்லார். காஜல் மட்டுமல்லாமல் பலரும் கூட இதற்கு ஆதரவாகவே உள்ளனர். ஆனால் நடிகை ஹாரத்தி போன்ற சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+