அடடே.. கலைப்புலி தாணுவும் வர்றாராமே...எல்லாம் சின்னத் திரைக்கு வந்த மவுசுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத் திரையை வெள்ளித் திரைக்கு நிகராக மதிச்சவர் முதலில் கே.பாலச்சந்தர் தான்.

கே.பி சார் தூர்தர்ஷன் காலத்திலிருந்து சின்னத்திரைக்கு நாடகங்கள் இயக்க ஆரம்பிச்சுட்டார். பிறகு சன் டிவி, ஜெயா டிவின்னு சின்னத்திரைக்கு மதிப்பு அளிச்சவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் சார்.

kalaipui thanu comes to tv

அடுத்து பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் சின்னத் திரையில் களமிறங்கி சீரியல்களை தயாரிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் இதுக்கு விதிவிலக்கல்ல.

இப்போ வெள்ளித் திரையில் பெரும் தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவும் சின்னத் திரையில் களம் இறங்கப் போகிறாராம்.

kalaipui thanu comes to tv

இவருக்கும் சன் டிவிக்கும் ஏற்கனவே பிரச்சனை... இவர் தயாரிப்பு படங்கள் எதையும் சன் டிவி வாங்குவதில்லை. ஜெயா டிவிக்கும் இவருக்குத்தான் நல்ல அண்டர்ஸ்டானிங்..இவர் படங்களில் பலப்படங்களை ஜெயா டிவிதான் ரைட்ஸ் வாங்கி இருக்கு.

இப்போ கலைப்புலி தாணு எந்த சேனலுக்கு சீரியல் எடுப்பார் என்கிற ஆவல் அதிகரிச்சு இருக்கு. இப்போ வர்ற டிவி சீரியல்கள் எல்லாமே பிரமாண்ட தயாரிப்பா இருக்கு.

அதுவும் பிரமாண்ட தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் உருவாகும் டிவி சீரியல் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா என்ன?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+