அடப் பாவிகளா... ராமர் வீட்டைதான் இடிச்சுட்டீங்களேடா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விதம் விதமான சிரிப்பு நிகழ்ச்சிகளை விஜய் டிவி மட்டும்தான் ஒளிபரப்பி வருகிறது. மற்ற சானல்கள் இதை பெரிதாக எடுத்துக்கொண்டு போட்டி போட நினைப்பதில்லை.

நாளை ஞாயிறு 2:30 மணிக்கு கலக்கப் போவது யாரு சாம்பியன் ஷிப் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம் போல கிரேஸ் கருணாஸ் நடுவராக உள்ளார்.

விஜய் டிவியின் இரண்டு தொகுப்பாளர்களும் உண்டு. இதில் கலந்துக் கொள்பவர்கள் யாரும் புதியவர்கள் அல்ல என்பதுதான் தெரிந்து கொள்ள வேண்டியது.

காலம் காலமாக

காலம் காலமாக

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு காமெடி ஷோ, காலம் காலமாக சீசன் சீசனாக நடந்துக்கொண்டு இருக்கிறது. இதில் எப்போதாவதுதான் புதியவர்களுக்கு வாய்ப்பு. மற்றபடி விஜய் டிவியின் காமெடி ஸ்டார்ஸ் வடிவேலு பாலாஜி, பழனி, அறந்தாங்கி நிஷா இப்படி அனைவரும் பழக்கப்பட்டவர்கள்தான்.

ராமர் வீடு ஷோ

ராமர் வீடு ஷோ

ராமர் வீடுன்னு ஒரு நிகழ்ச்சி கொஞ்ச காலம் ஒளிபரப்பாகி வந்தது. அந்த ராமர் இந்த கலக்கப் போவது யாரு சேம்பியன்ஷிப் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்.

பன்ச் டயலாக்

பன்ச் டயலாக்

கிரேஸிடம் அக்கா என் தங்கச்சியை பார்த்தீங்களான்னு கேட்க, கிரேஸ்.. இப்போதுதான் ஒயின் ஷாப்புக்கு வழி கேட்டுட்டு இப்படியே போனான்னு சொல்றாங்க. இப்படி பேசறது எல்லாம் இவங்களுக்கு சகஜமப்பா என்று ஆகிவிட்டது.

மாப்பிள்ளை எப்படிம்மா

மாப்பிள்ளை எப்படிம்மா உனக்கு வேணும்னு தங்கச்சிகிட்டே கேட்க, அஜீத் மாதிரி வேணும்னு சொல்றாங்க தங்கச்சி வேஷம் போட்டவங்க. அதுக்கு நீ ஷாலினியா இருக்கணும்னு ஒரு பன்ச்சாம். மாப்பிள்ளை வரார்.. கல்யாண வீடா இருந்தா நான்தான் மாப்பிள்ளையா இருக்கணும். எழவு வீடா இருந்தா நான்தான் பிணமா இருக்கணும்னு நெப்போலியன் பாணியில் சொல்ல,

ராமர் வீடா இருந்தான்னு இன்னொருத்தர் கேட்க, ராமர் வீட்டைத்தான் இடிச்சுட்டீங்களேடான்னு வருத்தமா சொல்றார். முழு நிகழ்ச்சியையும் நாளை பிற்பகல் பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+