Ayudha Ezhuthu Serial: காளி அம்மா மகன்னு சொல்லித்தான் தெரியுது... என்னத்த சொல்ல?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு சப் கலெக்டருக்கே தான் காதலிச்சது.. கல்யாணம் செய்துக்கிட்டது தனக்கு எதிராக சதி வேலைகள் செய்யும் காளி அம்மாவின் மகன்தான்னு கடைசியில் காளி அம்மாவே சொல்லித்தான் தெரியுது.

ஊருக்குள்ளே சப் கலெக்டரா வராங்க இந்திரா. சக்தி அந்த ஊரின் மிகவும் செல்வாக்கான காளி அம்மாவின் கடைசி மகன். காளி அம்மாவின் எல்லா தவறுகளுக்கும் சக்தியும் உடந்தையாகத்தான் இருக்கான்.

இந்திராவிடம் சக்தி தான் காளி அம்மாவிடம் உளவு பார்ப்பதாக சொல்லி இந்திராவை ஏமாற்றி வருகிறான். இவனது அப்பாவும் மகனின் பொய்க்கு உடந்தையாக இருக்கார்.

படிக்காதவனை அடையாளம்

படிக்காதவனை அடையாளம்

காளி அம்மா விருப்பப்படி அந்த ஊரில் ஒரு குழந்தையும் படிக்கக் கூடாது. இதனால், அவரது பிள்ளைகள் கூட படிக்கலை.ஆனால்,சக்தி தான் லண்டனில் சென்று படிச்சுட்டு வந்தவன்னு இந்திராகிட்டே சொல்றான்.சப் கலெக்டரான இந்திராவுக்கு அவன் படிச்சவனா படிக்காதவனா என்று கூட கண்டுபிடிக்க தெரியலை.

காதல் வலையில்

காதல் வலையில்

இந்திரா சக்தியின் மேல் காதல் கொள்கிறாள். சக்தி தனது அப்பாவின் துணையோடு இந்திரா மேல் விரிச்ச காதல் வலையில் இந்திரா விழுந்து விடுகிறாள். ஆனால், சக்தியின் காதல் மட்டும் உண்மையானதுதான். இந்திராவை கல்யாணம் செய்துக்க அம்மாவுக்குத் தெரியாமல் போறான் சக்தி.

குண்டு வச்சுடறாங்க

குண்டு வச்சுடறாங்க

காளி அம்மாவுக்கு தனக்கு எதிரியான இந்திராவுக்கு கல்யாணம்னு மட்டும்தான் தெரியும். யார் மாப்பிள்ளைன்னு தெரியாதாம். அதனால், கல்யாண மண்டபத்தில் மற்ற இரு பிள்ளைகளை வச்சு குண்டு வச்சுடறாங்க. காளி அம்மாவை பிரிஞ்சு இருக்கும் புருஷன் வந்து சொல்லித்தான் தெரியுது இந்திரா கல்யாணத்துல மாப்பிள்ளை தனது பிள்ளை சக்திதான்னு.

சப்கலெக்டர் மருமகள்

சப்கலெக்டர் மருமகள்

சப்கலெக்டர் மருமகள் என்றால் கசக்குமா என்ன..அவளை அடிமைப் படுத்தி இன்னும் விளையாடலாம்னு நினைக்கும் காளி அம்மா கல்யாணம் முடிஞ்சதும் போயி இந்திராவுக்கு நான்தான் உன் புருஷனோட அம்மான்னு அதிர்ச்சி தர்றாங்க.

கதை இப்படி போகுது...ஆனால், முதலில் இந்திராவா நடிச்ச பெண்ணையும் ,சக்தியா நடிச்ச பையனையும் இப்போ மாத்தி இருக்காங்க.இந்த ஜோடி நல்லாருக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+