செம லோக்கல் கெட்டப்பில் அசத்தி கல்லா கட்டும் அண்ணாச்சி!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் அடையாளமே இது நம்ம ஊரு கலரு வாசகம்தான். இதற்கு அடையாளமாகவே இந்த டிவியின் நிகழ்ச்சிகள் அமைந்து இருக்கும். சீரியல்களும் அப்படித்தான் அமைந்து இருக்கும்.
இமான் அண்ணாச்சி சொல்லுங்கண்ணே சொல்லுங்க பாணியில் ஊர் ஊராக சென்று கல்லாப்பெட்டி என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இதுவரை நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே மட்டுமே ... கலந்துக் கொண்டு வருகிறார்கள். பெண்கள் திருமணம் ஆனவர்கள், கல்லூரி பெண்கள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

பனியன் லுங்கி
பனியன் லுங்கி கெட்டப்பில் தலையில் முண்டாசு கட்டி எப்படி வேண்டுமானாலும் எபிசோடுக்கு எபிசோட் கெட்டப்பை மாத்தி வருகிறார் அண்ணாச்சி. மொத்தம் மூன்று சுற்றுக்கள். மூன்று சுற்றுக்களுக்கும் வெவ்வேறு ஆறு பெண்கள் என்று மொத்தம் மூன்று ரவுண்டுகளில் 18 பெண்கள் கலந்துக் கொள்கிறார்கள்.

டிரிங் ரவுண்டு
தப்பா நினைச்சுக்காதீங்க.. முதல் ரவுண்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு கிளாசில் இருக்கும் இளநீரை குடிச்சுட்டு பதில் சொல்ல வேண்டும். அதுவும் சீக்கிரம் குடிச்சுட்டு கிளாஸை வைப்பவர்களுக்கு பதில் சொல்ல வாய்ப்பு. பதில் சரியாக இருந்தால் ஆயிரம் இரண்டாயிரம் என்று பணம் கொடுக்கும் கல்லாப்பெட்டி நிகழ்ச்சி ஊருக்கு ஊர் வேறுபடும்.

ஆர்வமாக போட்டி
இந்த நிகழ்ச்சியில் கிராமத்து பெண்களும் சரி, நகரத்து பெண்களும் சரி. ஆர்வமாக கலந்துகொண்டு பதில் சொல்கிறார்கள். டான்ஸ் ,பாட்டு என்று நிகழ்ச்சி களைக் கட்டுகிறது. நடுவில் அண்ணாச்சியின் ஜோக்குகள் போனஸ்.

அண்ணாச்சி தினமும்
தினமும் மாலை நேரத்தில் கலர்ஸ் தமிழ் டிவியின் பெண்களுக்கான கேம் ஷோவாக கல்லாப்பெட்டி.. கிட்டத்தட்ட சன் டிவியில் இவர் செய்து வந்த சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சி போலத்தான். ஆனால், இதை கேம் ஷோவாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்து நிகழ்ச்சியை நன்றாக செய்து வருகிறார் இமான் அண்ணாச்சி.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications