Kallapetti: இமான் அண்ணாச்சி எங்க விட்டாலும் கல்லா கட்டிடறாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்லாப்பெட்டி நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி நல்லாவே கல்லாக்கட்டி வருகிறார்.

மக்கள் டிவியில் பொது ஜனம் தொடர்பான நிகழ்ச்சியை அருமையாக நடத்தி வந்த அண்ணாச்சியை சன் டிவி சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து அழைத்துக் கொண்டது.

வந்த வேகத்தில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியை நடத்தி உலகப் புகழ் அடைந்தார். அடுத்தடுத்து சன் டிவி இவருக்கு வாய்ப்பு கொடுத்து மகிழ்ந்தது.

சொல்லுங்கண்ணே சொல்லுங்க

சொல்லுங்கண்ணே சொல்லுங்க

சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ் அடைந்த இமான் அண்ணாச்சி, இந்த நிகழ்ச்சியை பல வெளிநாடுகளிலும் சுவாரஸ்யமாக நடத்தி வெற்றி கண்டார். இதை அடுத்து சன் டிவியின் சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கினார்.இதற்கிடையில் வந்த சினிமா வாய்ப்புக்களையும் அளவாக பயன்படுத்திக் கொண்டார் அண்ணாச்சி.

குட்டி சுட்டீஸ்

குட்டி சுட்டீஸ்

சன் டிவியில் குழ்ந்தைகளுக்கு என்று ஒரு சுவையான நிகழ்ச்சி இல்லாமல் இருந்தது. சன் டிவி ஆரம்பித்த புதிதில் ஒரு சில நிகழ்ச்சிகள் வெறும் ஃபார்மலாக ஒளிபரப்பாகி வந்தன. அதற்கடுத்து சிறப்பான சுவாரஸ்ய நிகழ்ச்சிகள் என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதையடுத்து இமான் அண்ணாச்சியை வைத்து மழலைகளுக்கு குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை சன் டிவி வழங்க ஆரம்பித்தது.

சூப்பர் ஹிட் ஷோ

சூப்பர் ஹிட் ஷோ

சன் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக குட்டி சசுட்டீஸ் நிகழ்ச்சி அமைந்தது. இமான் அண்ணாச்சி குழந்தைகளிடம் ரொம்ப ஈடுபாட்டுடன் ஒட்டிக்கொண்டு, படு சுவாரஸ்யமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.குழந்தைகளும் அண்ணாச்சி அண்ணாச்சி என்று ஒட்டிக்கொண்டனர். இமான் அண்ணாச்சிக்கான ஆதரவு தளம் என்பது 6 வயதிலிருந்து 60 வரையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி கோட் சூட்

சன் டிவி கோட் சூட்

சன் டிவி இமான் அண்ணாச்சிக்கு கோட் சூட் போட்டு அழகு பார்த்தது. அண்ணாச்சி சன் டிவியில் அடுத்து சீனியர் சுட்டீஸ் என்று ஒரு நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கினார். இமான் அண்ணாச்சி இப்படி உச்சத்துக்கு சென்ற கொண்டு இருந்த நேரத்தில்தான் என்னாச்சோ ஏதாச்சோ.. திடீரென்று அண்ணாச்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு வந்த நேரத்தில் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சிக்கும் எண்டு கார்டு போட்டார்கள்.

கலர்ஸ் தமிழ் டிவி

கலர்ஸ் தமிழ் டிவி

சன் டிவியை விட்டு வெளியில் போன அண்ணாச்சியை கலர்ஸ் தமிழ் டிவி வரவேற்று அரவணைத்துக் கொண்டது. தினமும் மாலை ஒளிபரப்பாகி வரும் கல்லாப்பெட்டி நிகழ்ச்சியை இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்கி வருகிறார். பெண்களுக்கு மட்டுமேயான சிறப்பு நிகழ்ச்சி இது. மிகச் சிறப்பான வரவேற்புடன் இந்த நிகழ்ச்சியை இமான் அண்ணாச்சி சூப்பராக நடத்தி வருகிறார்.

மகளிர் கல்லூரி

மகளிர் கல்லூரி

மகளிர் கல்லூரி, மகளிர் குவியும் இடம் என்று எந்த மகளிருக்கு இடையில் நிகழ்ச்சியை நடத்த விட்டாலும் தனி ஆளாக நின்று, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக நடத்தி வருகிறார் அண்ணாச்சி. இப்போது வெறும் கோட் சூட் என்று இல்லாமல், கெட்டப் போட்டு அதற்கேற்ப தனது உடைகளை அணிந்துக்கொள்கிறார்.

மதுரை மகளிர் கல்லூரியில் நடைப்பெற்ற நேற்றைய நிகழ்ச்சியில் அண்ணாச்சி மாரி தனுஷ் கெட்டப்பில் அசத்தி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+