கிராமத்துல போயி கள்ளு குடிக்கற சீன் வச்சு இருக்கீங்களே...இது நன்மை பயக்குமா ....?
சென்னை: ராஜா ராணி சீரியல் குடும்பம் குல சாமி கோயில் இருக்கும் சொந்த ஊரான கிராமத்துக்கு போயிருக்காங்க.
கிராமத்துல இந்த குடும்பத்து பசங்க ஒரு போட்டி வச்சுக்கறாங்க. புல்லு கட்டு தூக்கறது.. நெல்லு கட்டு தூக்கறது.. தண்ணி பானை தூக்கறதுன்னு...
இதெல்லாம் ரசிக்கும்படியா இருக்கு... அதென்னங்க கிராமத்துக்கு வந்தவங்க கள்ளு குடிக்கறாங்க... கேட்டால் கிராமத்து பானமாம்...

மது சிங்கப்பூரில்
ராஜா ராணி சீரியல் குடும்பம் ரெண்டு வாரத்துக்கு முன்னால சிங்கப்பூர் போயிருந்தாங்க. அப்போ அப்படித்தான் காக் டெயில் பார்ட்டின்னு ஒரு எபிசோட் முழுக்க காமிச்சாங்க.

கிராமத்துல இப்போ
கிராமத்துக்கு போயிருக்கும் ராஜா ரானி குடும்பத்து பசங்க மரத்துலேர்ந்து இறக்கின ஃபிரஷ் கள்ளாம்...குடிச்சுட்டு, கண்டதை பேசிகிட்டு, போதையில தள்ளாடி வீட்டுக்கு வர்றாங்க.

கிராமத்துல வேற
ஏங்க..கிராமத்துல வேற எதுவும் இல்லையா...?இளநீர் இருக்கு.. பதநீர் கூட இருக்கு. நுங்கு இருக்கு...பழைய சோத்து தண்ணி நீராகாரம் இருக்கு...பழைய சோறு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் உணவு இருக்கு...இதை எல்லாம் விட்டு கண்றாவி கள்ளுதான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சுதா...

எங்க இளைஞன்
இன்றைக்கு எங்க இளைஞன் சென்னைக்கு பக்கத்துல இருக்கற விவசாயிங்களுக்கு வயலில் இறங்கிய விவசாயம் பண்ண உதவி செய்ய வார கடைசியில கிளம்பி போறான்... வெளிநாட்டுல கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிச்சு ஊரில் விவசாய நிலம் வாங்கிப் போட்டு விவசாயம் பார்க்கறான்.

பெண்களும் இதில்
இன்றைய இளம் பெண்களும் இதில் பங்கெடுத்துகிட்டு விவசாயம் பார்த்து வயல் வெளியில சமைச்சு சாப்பிட்டு கிராமத்து மக்களா வாரத்தின் கடைசி இரண்டு நாட்களை கழிச்சுட்டு நகரத்துக்கு வர்றாங்க..இதெல்லாம் தெரியாதா உங்களுக்கு

கெடுக்கும் நோக்கில்
இப்படிப்பட்ட இன்றைய இளம் தலைமுறையினரை கெடுக்கும் விதத்தில் காக் டெயில் பார்ட்டின்னு சொல்றீங்க..கள்ளு குடிக்க வச்சு கதையை சூட் பண்றீங்க... என்னங்க இதெல்லாம்... கிராமத்துல அவங்க விவசாயம் பண்றது உங்களுக்கு பிடிக்கலையா...

எத்தனையோ விஷயங்கள்
எத்தனையோ நல்ல விஷயங்கள் கிராமத்துல இருக்கு. அதை தேடிப்புடிச்சு கிராமத்துல ஏதாவது உருப்படியா சூட் பண்ணிட்டு வாங்க சார்... ஏற்கனவே செம்பா சின்னய்யா ரொமான்ஸ் நடிப்பா உண்மையான்னு சந்தேகத்துல பார்த்து எரிச்சலில் இருக்கோம்.. இதுல இது வேறயா...?

அட அதை விடுங்க
கள்ளு குடிக்கிறது ஒரு பக்கம் போதையா அல்லது ஆரோக்கியமாக இருக்கட்டும். மறுபக்கம் ஒரு சோகச் செய்தி வந்து சேர்ந்திருக்கு. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நம்ம செம்பா கலந்துக்கப் போகுதாம். இதனால் செம்பா ரசிகர்கள் செம டென்ஷனாகியுள்ளனர். செம்பா சின்னய்யா ரொமான்ஸ் ரசிகர்களை கட்டிப் போட்டு வச்சிருக்கு. இந்த நேரம் பார்த்து பிரித்துக் கூட்டிச் செல்கிறார்களே என ரசிகர்கள் கவலையாகியுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டிலிருந்தாவது ஏதாச்சும் நடிச்சுட்டு போம்மா செம்பா என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications