கண்ணான பூமகனே! கண்ணுறங்கு சூரியனே! நடிகர் டேனியல் பாலாஜிக்காக கல்பனா பாடிய பாட்டு! உருகிய உள்ளங்கள்
சென்னை: மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான ஆர்பிஎம் என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் தன்னிடம் ஆசையாக கேட்ட ஒரு பாடலை பாடகி கல்பனா ராகவேந்தர் பாடினார். அவர் பாடிய பாடலின் வரிகள் அப்படியே டேனியலுக்கு பொருத்தமாக இருந்ததாக பலரும் நெகிழ்ச்சியாக தெரிவித்திருந்தனர்.
காக்க காக்க படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் டேனியல் பாலாஜி. இவர் சின்னத்திரையில் சித்தி சீரியலில் நடித்திருந்தார். இவர் நடிகர் முரளியின் உறவினர். இவர் கடந்த ஆண்டு 29ஆம் தேதி திடீரென காலமானார். அவர் இறந்து ஓராண்டு ஆகியுள்ளது.

அவர் வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அவரது நடிப்பு மிகவும் நன்றாக இருக்கும். இந்த கேரக்டருக்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என சொல்வதுண்டு. சினிமாவில் பெரிய அளவில் வலம் வர தேவையான அத்தனை தகுதிகள் இருந்தும் அவருக்கு சிறிய சிறிய கேரக்டர்களே கிடைக்கிறதே என அவரது திறமையை அறிந்தோர் நினைத்ததுண்டு.
ஏப்ரலில் படம்
அந்த வகையில் அவர் கடைசியாக அரியவன் படத்தில் நடித்திருந்ததை பார்த்தோம். ஆனால் அவர் நடித்து அவரது இறப்புக்கு பிறகு ஒரு படம் வெளியாகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு RPM என பெயரிடப்பட்டுள்ளது.
த்ரில்லர் படம்
இது சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படமாகும். படுக்கை அறை, பாத்ரூம் வரை யாரை அனுமதிக்க வேண்டும், யாரை அனுமதிக்கக் கூடாது என்று ஒரு வரைமுறை இருக்கிறது. ஆனால் அதையும் மீறி அந்த இரு இடங்களுக்கும் வருவோர் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ். அப்படி வருவோரின் நோக்கம் தவறாக இருந்தால் என்ன நடக்கும் என்பதை சொல்வதுதான் இந்த படம்.
டேனியல் பாலாஜி நடித்த படம்
இதில் டேனியல் பாலாஜி நடித்திருக்கிறார். அவருடன் கோவை சரளா, ஒய்ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை செபாஸ்டியன் ரொசாரியோ, எடிட்டர் ஆன்டனி, ஒளிப்பதிவாளர் அனிய் சித்ரசாலா.
டிரெய்லர் வெளியீட்டு விழா
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, டேனியல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு டேனியல் பாலாஜியின் தாய் அழைத்து வரப்பட்டார். அவரை பாடகி கல்பனா ராகவேந்தர் தான் கையை பிடித்து அழைத்து வந்தார்.
டேனியல் கேட்ட பாடல்
இந்த விழாவில் டேனியல் பாலாஜியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது கல்பனா பேசுகையில் ஒரு முறை டேனியல் பாலாஜி, ஏதேதோ பாடல்களை பாடுறீங்க. நான் கேட்கும் பாடலை உங்களால் பாட முடியுமா" என கேட்டார்.
தண்ணீர் தண்ணீர்
அதற்கு நான், என்ன பாடல் என சொல்லுங்க சார், எனக்கு தெரிந்தால் நான் இப்போதே பாடுகிறேன் என்றேன். அதற்கு அவர் தண்ணீர் தண்ணீர் படத்தில் எம்எஸ்வி இசையில் பி.சுசீலா பாடிய கண்ணான பூமகனே, கண்ணுறங்கு சூரியனே என்ற பாடலை கேட்டார்.
பாடமுடியவில்லை
அந்த பாடலை நான் நிறைய முறை கேட்டிருக்கிறேன். ஆனால் அப்போது என்னால் பாட முடியவில்லை. அவரிடம், "சார் நீங்கள் அழகான பாடலை கேட்டுள்ளீர்கள். இதை கற்றுக் கொண்டு பிராக்டீஸ் செய்துவிட்டு நான் பாடி காட்டுகிறேன்" என்றேன்.
பாடிய கல்பனா
ஆனால் அவர் உயிருடன் இருக்கும் போது என்னால் பாட முடியவில்லை. தற்போது நான் பாடுகிறேன். இது மறைந்த ஆத்மாவுக்கு மிகவும் பொருந்தும் என கூறிய கல்பனா அந்த பாடலை பாடியிருந்தார். அப்போது உருக்கமாக இருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications