Kalyana Veedu Serial: ரோஜா பேக்..கோபி-ஸ்வேதாவா? கோபி சூர்யாவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ஜெயிலில் இருந்த ரோஜா, ராஜா ரெண்டு பேருமே ஒரு கேஸும் பதிவாகாம வெளியில் வந்துட்டாங்க. ரோஜா வீட்டுக்கு வந்து பார்த்தால், கோபி ஸ்வேதாவை கல்யாணம் செய்துக்க சம்மதம் சொல்லிடறான்.

சூர்யாவுக்கு அவங்க அப்பா சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று ஒரு மாப்பிள்ளையை தரகர் அழைத்து வர அதற்கும் சம்மதம் சொல்லிடறார் ஆனால், அவன் கோபி சிங்கப்பூரில் இருந்தபோது, ஸ்வேதாவின் தோழி கணவர்.

இந்த உண்மை தெரியாத சூர்யாவின் அப்பா இந்த மாப்பிள்ளைக்கு சம்மதம் சொல்லிடறார். இப்படி எல்லாம் ஏடாகூடமாக நடந்து கொண்டு இருக்க, ரோஜா அப்பாவிடம் ரொம்ப கோச்சுக்கறா.

சூர்யா காதல்

சூர்யா காதல்

உங்களுக்கு என்னப்பா இவ்ளோ கோபம்.. ஈகோ? இதனால் உங்க பொண்ணோட வாழ்க்கை வீணாப் போகுதேன்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களா? கோபி இன்னிக்கு வரைக்கும் நம்ம குடும்பத்துக்கு நல்லதுதானே செய்திருக்கார். என்னை வெளியில் ஒரு கேஸும் இல்லாம கொண்டு வந்ததுக்கு காரணமே கோபிதான். இப்படி அவர் நம்ம குடும்பத்துக்கு எவ்ளோ நல்லது செய்திருக்கார். அதை எப்படிப்பா மறந்தீங்கன்னு கேட்கறா.

தப்பு என்னப்பா

தப்பு என்னப்பா

கோபி மேல தப்பு என்னப்பா கண்டு பிடிச்சீங்கன்னு ரோஜா கேட்க, இல்லம்மா...அவன் மகாபலி புரத்துல ஒரு முக்காடு போட்ட பெண் கூட இருந்தான்னு சொல்லி முடிப்பதற்குள், உடனே தப்பான கண்ணோட்டத்துல பார்த்து முடிவெடுத்து வெறுத்து கெட்டவன்னு முடிவு பண்ணிடுவீங்களான்னு கேட்கறா. இல்லைமா நான் கேட்டேன் அவன் பதில்னு சொல்லி முடிப்பதற்குள், அவர்தான் தங்கச்சி கல்யாணம் முடியட்டும்னு சொன்னாரல்ல. அதுவரைக்கும் பொறுமையா இருக்க முடியாதான்னு கேட்கறா.

காத்திருக்க முடியும்

காத்திருக்க முடியும்

எத்தனை நாள் பொறுமையா இருந்து காத்திருக்க முடியும்மான்னு அப்பா கேட்க, ஏன்ப்பா கண்டவனுக்கு எல்லாம் காத்து இருக்கீங்க. ஒரு நல்லவருக்காக காத்திருந்தா என்ன உங்க பொண்ணு கற்பூரமா கரைஞ்சு போகன்னு கத்தறா. இப்படி பண்ணிட்டீங்களேப்பான்னு அவள் கேட்க, இல்லமா நடுவுல வந்து ஸ்வேதா அண்ணன் புருஷோத்தமன் குழப்பிட்டான்மா.. நானும் அவன் பேச்சை கேட்டுகிட்டு இருந்துட்டேன்னு சொல்றார்.

நஷ்டம் யாருக்குப்பா

நஷ்டம் யாருக்குப்பா

இப்போ நஷ்டம் யாருக்குப்பா? புருஷோத்தமன் உங்களை ஒத்துக்கிட்டு, இப்போ அவன் தங்கச்சியை கோபியே தன் வாயால கட்டிக்கறேன்னு சொல்ற அளவுக்கு காயை நகர்த்திக்கிட்டான்னு சொல்றார். ஏண்டி, உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? அப்பாவுக்கு அப்பாவுக்குன்னு நீ விட்டுக் கொடுத்தியே... உனக்காக அப்பா விட்டுக் கொடுத்தாரா? இப்படியே அப்பா அப்பான்னு உன் வாழ்க்கை இப்போ போச்சேன்னு உட்கார்ந்து அழறா ரோஜா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+