Kalyana Veedu Serial: என்னங்கடா இது.. கல்யாண வீடுக்குமா சன்டே ஒன் அவர்!?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலுக்கு ஞாயிற்று கிழமை இரவு ஒரு மணி நேரத்தை ஸ்பெஷலாக ஒதுக்கித் தந்து இருக்கிறது சன் டிவி. கடந்த ஒரு மாதமாக சன் டிவி சீரியலுக்கு ரேட்டிங்கை உயர்த்த புது யுக்தியைக் கையாண்டு வருகிறது. அந்த யுக்திக்கு கை மேல் பலன் கிடைக்கிறது போலும்...! இந்த வாரம் கல்யாண வீடு சீரியலுக்கு ஞாயிற்று கிழமை 9:30 மணி முதல் 10::30 மணி வரை என்று நேரத்தை ஒதுக்கிந் தந்து இருக்கிறது.
அதாவது சீரியல்களில் ரொம்ப சுவாரஸ்யமாக ஆனால், அதே சமயம் கொஞ்சம் இழுவையில் ஒரு விஷயம் முடியாமல் இருக்கும் சீரியல்களுக்கு, சன் டிவி ஞாயிற்று கிழமை இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை என்று, ஒரு நேரத்தை ஒதுக்கித் தருவதை கடந்த ஒரு மாதமாக வழக்கமாக கொண்டு இருக்கிறது.
ஞாயிறு டபுள்ஸ் என்று ஞாயிற்று கிழமை இரண்டு படங்களை வரிசையாக ஒளிபரப்பி, திரைப்பட ரசிகர்களை இங்கு அங்கு நகர விடாமல் கட்டிப்போடும் யுக்தியை கையாண்டு வந்த சன் டிவி அந்த நேரத்தில்தான் இந்த ஒரு மணி நேரத்தை சீரியல்களுக்கு ஒதுக்கித் தந்து அன்றைய தினம் ஒரு படத்தை ஒளிபரப்புவதை நிறுத்தி வைத்து வருகிறது.

ராசாத்தி சீரியல் சித்தி 2
முதன் முதலில் சித்தி 2 ஒளிபரப்பாக இருந்த நேரத்தில் வழக்கமான ராசாத்தி ஒளிபரப்பு நேரத்தை சித்திக்கு ஒதுக்கித் தந்து, முன்னதாக ராசாத்தி சீரியலுக்கு ஞாயிறு அன்று ஒரு மணி நேரத்தை ஸ்பெஷலாக ஒதுக்கி ஒளிபரப்பியது. அடுத்து, சித்தி ஒளிபரப்பான நேரத்தில் ராசாத்தியின் ஒளிபரப்பை நிறுத்தி, சித்தி 2 சீரியலுக்கு ஒரு மணி நேரத்தை தந்து. சீரியல் ஆர்வலர்களை அன்றைய தினம் திருப்தி படுத்தியது.

ரோஜாவுக்கு ஸ்பெஷல்
சன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல், பலரும் விரும்பிப் பார்க்கும் ஒரு சீரியல், ரோஜா சீரியலின் பயணம் ஒரு சினிமா போல அவ்வப்போது ஜாலியாக, அதே சமயம் ஆக்ஷனுடன் என்று இருக்கிறது. இந்த சீரியலில் அணு அன்னபூரணி அம்மா பேத்தி இல்லை என்பதை நிரூபிக்க கடந்த ஒரு வருஷத்துக்கு மேலாக நாயகன் அர்ஜுன் போராடி வருகிறான். அணுவுக்கும், அஷ்வினுக்கும் கல்யாணம் செய்தே தீருவேன் என்று அன்னபூரணி பாட்டியும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போராடி வருகிறார். இரண்டுக்கும் சேர்த்து கடந்த ஞாயிறு அன்று இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரையான நேரத்தை ரோஜா சீரியலுக்கு ஒதுக்கித் தந்தது சன் டிவி.

இப்போது வரை இழுவை
என்னதான் ஸ்பெஷல் டைம் நீங்க ஒதுக்கித் தந்தாலும், எங்கள் இழுவை தொடரும் என்பது போல் போன ஞாயிறு ஸ்பெஷல் தினத்தில் ஆரம்பித்த ரோஜா சீரியலின் கல்யாண மண்டப சீன் இந்த ஞாயிறும், வந்துட்டு போயாச்சு...அந்த கல்யான மண்டப சீன்தான் இன்னும் ஓடிக்கிட்டே இருக்கு. ஒரு மணி நேரத்தையும் அழகு ரோஜா, அணு,பூஜா என்று காண்பித்து, லதா, வடிவுக்கரசியின் போட்டியை காண்பித்து சீரியல் ஆர்வலர்களை இழுக்க மட்டுமே முயற்சி செய்து இருக்கிறது ரோஜா சீரியல் குழு.

இந்த வரம் கல்யாண வீடு
இந்த வாரம் ஞாயிறு தினத்தின் இரவு 9:30 மணி நேரத்தை திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியலுக்கு ஒதுக்கித் தந்து இருக்கிறது சன் டிவி. ஸ்வேதாவை அவளது கணவன் கொலை செய்யவும், ஸ்வேதாவை அடைய நினைக்கும் மலேசிய வாலிபன் அவனது முயற்சியில் வெற்றி கண்டானா என்பதை காண்பிக்கவும், திருமுருகன் இந்த நேரத்தை பயன்படுத்தி, ஒரு மாதிரி கிரிமினல் கதையில் விறுவிறுப்பு என்று காண்பித்து சீரியல் ஆர்வலர்களின் பிபியை அன்றாடம் எகிற வைக்க இன்னும் கல்யாண வீடு ரசிகர்களை பெருக்குவார் என்கிற நினைவில் இருக்கும் சன் டிவியின் எண்ணம் ஈடேறுமா?
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications