Kalyana Veedu Serial: எப்போதும் இதுதான் கதையா கோபி கிருஷ்ணன்?
சென்னை: சன் டிவியில் 7:30 மணி நேரத்தை மெட்டி ஒலி காலத்தில் இருந்து இப்போது ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியல் வரை ஒதுக்கித் தந்துள்ளது. இதை சரியாகவும் பயன்படுத்தி வருகிறார் திருமுருகன்.
ஆனால் காலம் காலமாக இரண்டு மூன்று பெண்கள் தன்னை விரும்புவது போல காண்பித்து கொள்வது...என்னதான் வயதானாலும் கோபி கிருஷ்ணன் என்ற வேடத்தில் கல்யாணமாகாத பையனாகவே நடிப்பது என்று திருமுருகனை பார்ப்பது போரடிக்குது.
அதிலும் கல்யாண வீடு சீரியலில் விக் வேற வச்சுக்கிட்டு தொப்பையை வளர்த்துக்கிட்டு, இன்னும் தன்னை இரண்டு பெண்கள் விரும்புவது...அத்துடன் பள்ளியில் படிக்கும் இரண்டும் கெட்டான் வயது பெண் தன்னை பார்த்து வழிவது போன்ற கதாபாத்திரங்கள் எல்லாம் வடிவமைச்சு நடிச்சுக்கிட்டு வர்றார்.

ஸ்வேதா சூர்யா
திருவையாறு கிராமத்துக்கு வந்து சூர்யாவை காதலிக்கையில், அந்த காதலுக்கு தடை வருகிறது. வெளிநாட்டுக்கு போகலாம் என்று போனால், அங்கு டெல்லியில் தன்னுடன் மியூசிக் ட்ரூப்பில் பாடிய ஸ்வேதா தன்னை காதலிப்பது தெரிந்து அவரை கல்யாணம் செய்து கொள்வதாய் வாக்கு கொடுக்கிறார்.

மீண்டும் திருவையாறு
மீண்டும் திருவையாறு திரும்புகையில் சூர்யா தன்னையே நினைத்துக் கொண்டு இருப்பதை அறிந்து, மறுபடியும் இரண்டு பெண்களோடு காதல் பயணம். கோபி எனக்கா உனக்கா என்று போட்டி., கோபி செய்வதறியாது தவிப்பது இப்படியே போகிறது கதை.

சுவேதாவின் புருஷன்
கடைசியில் ஸ்வேதாவை கல்யாணம் செய்வதுன்னு ஒரு முடிவுக்கு வந்து ஆசை ஆசையாய் நான் எடுத்துக் கொடுத்த புடவையை கட்டிக்கணும். அதே புடவையில் கோயிலில் போயி சிம்பிளாக நிச்சயதார்த்தம் செய்துக்கலாம் என்கிற தனது ஆசையை ஸ்வேதாவிடம் சொல்கிறார். புடவையை எடுத்து வருவதற்குள் ஸ்வேதாவின் புருஷன் திரும்பி வந்து புதுக் கதையை சொல்ல, புருஷனோடு வாழ்வது என்கிற முடிவுக்கு ஸ்வேதா வந்துவிடுகிறார்.

மாற்றி தேற்றி
அதே மனதை உடனடியாக மாற்றி தேற்றி தன்னையே இன்னும் நினைத்துக் கொண்டு இருக்கும் சூர்யாவை மறக்க முடியாமல் தவிக்கிறாராம். .சூர்யாவும் கோபிக்கு ஸ்வேதா இல்லை என்றவுடன் மீண்டும் மனதில் பூட்டி வைத்த காதலை வெளியில் கொண்டு வந்து தவிக்கிறார்.
என்னங்க கதை இது.. இத்துடன் தங்கச்சி சென்டிமென்டை நுழைத்து விட்டால் மட்டும் தவறு சரியாகி விடுமா? முதலில் உங்களை சுற்றியே கதை பின்னுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும் என்று தோணுது திருமுருகன்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications