Kalyana Veedu Serial: குற்றாலத்துக்கு குடும்பத்தோடு ஹனிமூனா?.. என்னங்க வேடிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் அண்ணன் கோபி மூன்று தங்கைகளுக்கும் கல்யாணம் செய்து வைத்துவிட்டான்.இதில் முதல் தங்கைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே கல்யாணம் நடந்துருச்சு.

அடுத்த இரண்டு தங்கைகளில் வருடத்தில் ஒருவருக்காக கல்யாணம் நடத்தி முடிச்சாச்சு.இப்போது முதலில் நடந்த இரண்டாவது கல்யாணத்தில் தங்கைக்கு ஒரு வருடம் ஆகியும் குழந்தை பிறக்கலை என்று மாமியார் நச்சரிக்கறாங்க.

வீட்டில் இந்த தம்பதி சந்தோஷமாக இருக்க எந்த ஒரு பிரைவசியும் இல்லை .இது மட்டும் இந்த மாமியார் நாத்தனார் மண்டைக்கு உரைக்காமல் போவது ஏன் என்றுதான் தெரியவில்லை.

அறிவுரை டாக்டர்

அறிவுரை டாக்டர்

கல்யாணம் ஆகி தங்கச்சிக்கு ஒரு வருஷம் ஆச்சுங்க, இன்னும் குழந்தை பிறக்கலேன்னு மாமியார் ,மாமனார் சொல்லி காமிச்சுக்கிட்டே இருக்காங்கன்னு டாக்டர்கிட்டே கன்சல்ட் செய்யறான் கோபி.ஒரு வருஷத்துக்குள்ளே குழந்தை வேணும்னா எப்படி.அதுவும் புருஷன் பொண்டாட்டிக்கு பிரைவசி கூட அந்த கூட்டு குடும்பத்தில் இல்லைன்னு சொல்றாங்க.அப்புறம் எப்படி குழந்தை பிறக்கும், எங்கியாவது ஹனிமூன் அனுப்பி வைங்க நல்ல படியா எல்லாம் நடக்கட்டும், அதுக்குப் பிறகு நான் பார்த்துக்கறேன்னு டாக்டர் சொல்லி அனுப்பறாங்க.

புதிய ஜோடியையும்

புதிய ஜோடியையும்

சரி பழைய ஜோடியான இரண்டாவது தங்கை, புது ஜோடியான மூன்றாவது தங்கை இரு ஜோடிகளை ஹனிமூன் அனுப்பி வைக்கலாம்னனு கோபி முடிவு செய்ய, பெரிய தங்கை வீட்டில்நாங்களும் உங்க ஹனிமூனுக்கு வருவோம்னு ஒரே அடம். இரண்டாவது தங்கச்சி வீட்டில் நாங்களும் வருவோம்னு அடம்..எல்லாரும் கிளம்பி நிக்கறாங்க.

சின்னது கார்

சின்னது கார்

கோபி தங்கை மச்சானுக்கு புக் செய்து இருப்பது நான்கு பேர் மட்டுமே போகக் கூடிய கார். எப்படி இத்தனை பேரும் காத்து கொண்டு இருக்க அதிர்ச்சியாகி மயக்கத்தில் விழப் போகிறான் கோபி. குடும்பமா ஹனிமூன் போறதுதான், எங்கியாவது ஊட்டி, கொடைக்கானல்,, ஏற்காடு என்று இருந்தால்.

வேலையை பார்த்தால்

வேலையை பார்த்தால்

புது ஜோடிகளுடன் ஹனிமூன் போகிறோம் என்று சொல்லி,அவர்களுக்கு இங்கும் பிரைவசி கொடுப்பதில்லை சில குடும்பங்கள்.இதில் மாமியார், நாத்தனார் புதிதாக வீட்டுக்கு வந்திருக்கும் மருமகள்,தனது மகனுடன், தம்பியுடன் சந்தோஷமாக இருக்க கூடாது என்கிற குறிக்கோளில் செயல்படாமல் இருந்தால் இப்போது இருக்கும் பயமான காலக் கட்டத்தில் கூட்டமாக ஹனிமூன் சென்றால் நன்றாகத்தான் இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+