Kalyana Veedu Serial: அண்ணே அண்ணே இப்போ கோபி சென்டிமென்ட் ஃபார்ம்!
சென்னை: பாசமலர் காலத்தில் இருந்து இன்று வரை அண்ணன் தங்கை சென்டிமென்ட், கதைகளுக்கு மவுசு அதிகம். மகள்களுக்கு அப்பா எப்படியோ,அப்பாக்களுக்கு மகள்கள் எப்படியோ.. அப்படித்தான் அண்ணன்களுக்கு தங்கைகளும், தங்கைகளுக்கு அண்ணன்களும்.
ஆனால், இவைகளில் ஒரு படி மேலே போய் நிற்பது அண்ணன் தங்கை சென்டிமென்ட். சின்ன விஷயத்தில் இந்த சென்டிமென்டை கதையில் சரியான நேரத்தில் புகுத்தி விட்டாலும் கதை சக்ஸஸ்தான்.
இதை கையில் எடுத்தவர்களுக்கு தோல்வி கிடையாது. சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் அண்ணன் கோபிக்கு மூன்று தங்கைகள்.இதுவரை கல்யாணம், நகைச்சுவை, ஜாலி என்று சென்று கொண்டு இருந்த கதையில் நேற்று புதிதான டிவிஸ்ட்.

இப்படியுமா குடும்பங்கள்?
கோபியின் கடைசித் தங்கைக்கு கல்யாணமாகி ஒரு சில நாட்களில் ஹனிமூன் அனுப்பலாம் என்று திட்டமிடுகிறார் கோபி. காரணம் கல்யாணமாகி ஒரு வருடமாகியும்,இரண்டாவது தங்கைக்கு குழந்தை உருவாகவில்லை.டாக்டரிடம் கேட்டால், அதுக்குள்ளே எதுக்கு அவசர படறீங்கன்னு கேட்கறாங்க. மாமியார் என்னடான்னா இன்னும் குழந்தை உண்டாகலைன்னு புகார் சொல்றாங்க.

பிரைவசி எப்படி
குடும்பத்தில் புருஷன் ,பொண்டாட்டிக்கு பிரைவசி இருக்கான்னு டாக்டர் கேட்க, இல்லைங்க கூட்டு குடும்பம், சின்ன வீடுன்னு அண்ணன் கோபி சொல்றான்.அப்புறம் அவங்களுக்கு குடுக்க வேண்டிய இடத்தை கொடுக்காமல், குழந்தை பிறக்கலைன்னு கம்பளைண்ட் மட்டும் சொல்றீங்க.எங்கியாவது ரெண்டு பேரையும் தனியா அனுப்பி வைங்கன்னு டாக்டர் சொல்றாங்க.

இரு ஜோடிகள்
இப்படி ரெண்டாவது தங்கை மச்சான், கடைசி தங்கை மச்சான் என்று ரெண்டு ஜோடிகளை குற்றாலம் அனுப்பலாம்னு திட்டமிட்டு, கோபி ஏற்பாடு செய்தால், இந்த தங்கை குடும்பமும் ,அந்த தங்கை குடும்பமும் கூடவே போவோம்னு பல தில்லுமுல்லுகள் செய்து கடைசியில் கூட்டமா ஹனிமூன் போறாங்க.

இரு சம்பந்திகளும்
இரு சம்பந்திகளும் திட்டமிட்டு கலகம் செய்து வர கடைசி கலகம் ஒண்ணு பண்றங்க பாருங்க.சின்ன மாப்பிள்ளையின் தங்கச்சியை கெட்ட பொண்ணுன்னு திட்டி, தன்னோட பேத்தியை அவ கூட சேராதேன்னு சொல்லி வம்பு இழுக்கறாங்க. அந்த பொண்ணு.அப்படி எல்லாம்பேசாதீங்க...நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லைன்னு சொல்லிட்டு அழுது.

சூடான சாதம்
கையில் தட்டில் வச்சிருந்த சூடான சாதத்தை அந்த பொண்ணு தலையில கொட்ட, அவளின் அண்ணன் பெரிய மாப்பிள்ளை சின்ன மாப்பிள்ளையின் அம்மாவை அடிக்க, உடனே சின்னமாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளையை அடிக்க, இரு மாப்பிள்ளைகளும் அடிச்சுக்கும் அந்த கொடுமையான காட்சியை பார்க்க முடியாமல், இரண்டு மாப்பிள்ளைகள் காலில் விழுகிறான் கோபி.

இப்படி சண்டையா?
ஒரு வழியாக இரு குடும்பமும் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, அவரவர் அறைக்கு சென்றுவிட, இரு தங்கைகளுடன் நல்லாத்தானே ரெண்டு மாப்பிள்ளைகளும் இருந்தாங்க .இப்படி அடிச்சுக்கறாங்களே.. என்னம்மா செய்வேன்னு கோபி அழும்போது,இரு பக்கத்திலும் இரு தங்கைகளும் குமுறி அழுகிறார்கள். இனி அந்த குடும்பத்தை பழைய நிலைமைக்கு எப்படி கொண்டு வருவது?
இதுதான் இயக்குநருக்கு பெரும் சவால்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications