Kalyana Veedu Serial: தங்கைக்காக கொலையும் செய்வானா கோபி?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் அண்ணன் தங்கை சென்டிமென்ட், குடும்ப சென்டிமென்ட் என்று கதை நன்றாகவே இருக்கிறது.
அதோடு கலகலப்பு இருப்பது போல கைகலப்பும் கதையோடு ஒன்றி வெகு ஜோராக நகர்கிறது. கதையை காவிரி டெல்டா பகுதியான திருவையாறில் நடப்பது போல காண்பித்து இருக்கிறார்கள்.
இதற்காக காவிரி ஆற்றங் கரையை ஒட்டிய வீடுகளில் படம் பிடித்து இருப்பதும் நன்றாக இருக்கிறது. தண்ணீர் ஓடிய காவிரி, வற்றிய காவிரி என்று இரண்டையும் பார்க்க முடிகிறது.

நடப்பது ஒண்ணு
எப்போதுமே மனிதர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவது என்பது, மனதில் ஆழமாக இருந்தாலும், வாக்கை காப்பாற்றுவது என்பது அவ்வப்போது அமையும் சூழ்நிலைக்கு ஏற்பவே அமைகிறது. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இதயத்தில் அடைப்பு எனும்போது ஆபரேஷன் தியேட்டருக்கு போகும் முன்னர் சூர்யாவின் அப்பா,சூர்யாவுக்கும், ராஜாவுக்கும் கல்யாணம் என்று வாக்கு கொடுத்தார். ஆனால், அதை காப்பாற்ற முடியவில்லை.

வாக்கு கோபி
ஸ்வேதாவின் அண்ணன் நந்தகுமார் ஆபரேஷன் தியேட்டருக்குப் போகும் முன்னர் ஸ்வேதாவை நண்பன் கோபி கல்யாணம் செய்துக்கணும்னு சத்தியம் கேட்க, கோபியும் சத்தியம் என்று வாக்கு கொடுக்கிறான். அதற்குள் மறுபடி சூர்யாவை கல்யாணம் செய்து கொள்ளும் நிலையை குடும்பத்தினர் உருவாக்கி இருந்தார்கள். இப்போது மறுபடியும் ஸ்வேதாவை கல்யாணம் செய்துக்கறேன்னு வாக்கு குடுத்து இருக்கான்.

தங்கை சவீதா
கோபியின் தங்கை சவீதாவின் கல்யாணமே ஒரு போராட்டத்தில்தான் நடக்கிறது. டெல்லியில் குடும்பமாக கோபி வசிக்கையில், தங்கை சவீதா ஜித்துவின் மூலம் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் நிலையில் இருக்க, அவனை அடித்து போட்டுவிட்டு தங்கையை காப்பாத்தி அழைச்சுக்கிட்டு வந்ததோடு,பிச்சைமணி என்கிற போலீஸ் மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணமும் செய்து வைக்கிறான்.

சவீதா கல்யாணம்
டெல்லி ஜித்து சவீதாவின் கல்யாணம் நடக்க இருப்பதை அறிந்து, திருவையாருக்கே வந்து பிரச்சனை கொடுக்கிறான். அவனிடமிருந்து தங்கையை காப்பாத்தி அவளுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்குள் பெரும் போராட்டமே நடந்து முடிந்து விடுகிறது. ஆனால், கல்யாண மண்டபத்தில் இரண்டு கொலைகள். இந்த கொலைகளை செய்தது கோபியாக ஏன் இருக்கக்கூடாது என்று போலீஸ் சந்தேகப் படுகையில், நமக்கே கூட தங்கைக்காக கோபி கொலையும் செய்வானோ என்கிற பகீர் உணர்வு ஏற்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications