Kalyana Veedu Serial: திருமுருகன் சீரியலை.. திரு டிவியில் காட்டப்படாது.. தடை போட்ட சன்!
Recommended Video
சென்னை: பிசினெஸ் என்றால் தீயா வேலை செய்யணும் குமாரு பாணிக்கு வந்துடணும். இதில் பார்ட்னர்ஸ் யாருடனாவது மனஸ்தாபம் வந்து விட்டாலும், அதுவும் ஒரு பாடம்தான்.
உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்லன்னு ஞான நிலைக்கு வந்துட்டு, நம்ம தொழிலை கவனிக்க ஆரம்பிச்சுடணும்.
இந்த பில்டப் எதுக்கு என்று கேட்காதீர்கள். நடந்த உண்மையை சொல்ல வேண்டாமா? இந்த நிலையில்தான் இப்போது சன் டிவியும், யூ டியூப் திரு டிவியும் இருக்கிறது.

கல்யாண வீடு திருமுருகன்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இயக்குநர் திருமுருகன் சொந்த தயாரிப்பு நிறுவனமான திரு பிக்சர்ஸ், யூ டியூபில் திரு டிவி என்று துவங்கியது. தனது சீரியல்களை சன் டிவியில் ஒளிபரப்பாகி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு திரு டிவியில் ஒளிபரப்பி வந்தது. அதை அந்த டிவியில் எப்போது வேண்டும் என்றாலும் மக்கள் பார்க்கலாம்.

பில்லியனை தாண்டி
திரு டிவி வியூவர்ஸ் ஒரு பில்லியனைத் தாண்டிவிட, பார்த்தது சன் டிவி. இயக்குநர் திருமுருகனுக்கே இவ்வளவு பிசினெஸ் நாலெட்ஜ் இருக்கும்போது, பழம் திண்ணு கொட்டை போட்ட சன் டிவி எந்த அளவுக்கு நாலெட்ஜில் இருப்பார்கள். உங்கள் சீரியல்தான் என்றாலும், உங்கள் சேனலில் ஒளிபரப்ப உரிமை இலை என்று சொல்லிவிட்டது.

சன் நெக்ஸ்டில்
கல்யாண வீடு சீரியலை இப்போது, சன் டிவியை விட்டால் சன் நெக்ஸ்டில் மட்டுமே பார்க்க முடியும். அந்த அளவுக்கு பிசினெஸ் டீல் பேசி முடிந்துவிட்டது சன் டிவி. அதனால்தான், திரு டிவியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கல்யாண வீடு சீரியலை பார்க்க முடிவதில்லை.

திரு டிவியை அப்படியே
அதற்காக திரு டிவியை அப்படியே விட்டுவிட முடியுமா? ஒளிபரப்பான சீரியலின் விமர்சனத்தை ஒலிப்பதிவு செய்து, எபிசோடின் படங்களை மட்டும் வைத்து திரு டிவி தனது பிசினெஸை நடத்தி வியூவர்ஸை தக்க வைக்கப் பார்க்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications