Kalyana Parisu Serial: கல்யாண பரிசு சீரியல் வாய்ஸ் ஓவருடன் எண்டு கார்ட்!
சென்னை: சன் டிவியின் கல்யாண பரிசு சீரியலை இன்றுடன் வாய்ஸ் ஓவர் கொடுத்து முடித்து வைத்து விட்டார்கள். தினமும் காலையில் 11:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது கல்யாண பரிசு சீரியல்.
இதில் நடிகை ஸ்ரித்திகாஸ்ரீ நாயகியாக நடித்து வந்தார். மலேசிய தமிழ் பெண்ணான இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடத்து முடிந்தது.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இயக்குநர் திருமுருகனின் நாதஸ்வரம் சீரியலில் மலர் கேரக்டர் மூலம் பிரபலம் ஆனவர். கடந்த ஒன்றரை வருடமாக சன் டிவியில் கல்யாண பரிசு சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

லாக்டவுன் விளைவு
கோவிட் 19 தொற்று பயத்தால் லாக்டவுன் அமலில் உள்ள நேரத்தில் டிவி சீரியல்கள் ஷூட்டிங் இல்லை. ஒளிபரப்ப எபிசோட் இல்லை. லாக்டவுன் எப்போது நீக்கப்படும் என்றும் தெரியவில்லை. இந்த இக்கட்டை சமாளிக்க முடியாத சின்னத்திரை சீரியல் தயாரிப்பு நிறுவனங்கள் சீரியலை முடித்துக்கொள்ளும் நிலைக்கும் உள்ளாகி இருக்கின்றன.

கல்யாண பரிசு சீரியல்
கல்யாண பரிசு சீரியலை கடைசி நேரத்தில் டப்பிங் கொடுக்க நேரம் இல்லாமல்,. நடிக்க வைக்கவும் ஆட்கள் இல்லாமல், இருக்கும் காட்சிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து கதையை முடித்து சுபம் போட்டு, கல்யாண பரிசு சீரியலை முடித்து விட்டார்கள். கடைசி காட்சியில் சீரியலில் நடிக்கும் பெரும்பாலான நட்சித்திரங்கள் அனைவரும் பூஜையில் இருப்பது போல காண்பித்து சுபம் போட்டு விட்டார்கள்.

இன்று வரை
சன் டிவியின் மாலை நேர சீரியல்களில் சில இன்று மாலை வரை எப்படியாவது காலத்தை ஓட்டி விடலாம் என்று, போட்ட காட்சிகளையே திரும்ப திரும்ப போட்டு, ஃ பிளாஷ் பேக் காட்சிகளை காண்பிப்பது போல ஒப்பேற்றி வருகின்றன. இதில் முதலில் நிற்பது ரோஜா சீரியல், நேற்று முழுவதும் இப்படியே ஒப்பேற்றி நேரத்தை கடத்தி இருக்கிறது ரோஜா சீரியல்.

நாளை பட்டி மன்றம்
சன் டிவி ஏற்கனேவே ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை இப்போதே தூசித் தட்டி எடுக்க ஆரம்பித்து ஒளிபரப்பத் துவங்கி இருக்கிறது. இன்று காலை வணக்கம் தமிழாவில் வெந்நிற ஆடை நிர்மலா பேட்டி.. நாளை ஒளிபரப்பாக உள்ள பட்டிமன்றம் என்று பழைய நிகழ்ச்சிகளை தூசித் தட்ட ஆரம்பித்து இருக்கிறது சன் டிவி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications