Thug Lifeல் அபிராமிக்கு லிப் லாக்! விருமாண்டியிலேயே ரிகர்சல் பார்த்தாச்சு! விடுங்க சார்! கமல் பளீச்
சென்னை: தக் லைப் திரைப்படத்தில் அபிராமிக்கு உதட்டு முத்தம் கொடுத்தது குறித்து கேட்டதற்கு விருமாண்டியிலேயே ரிகர்சல் பார்த்தாச்சு, விடுங்க சார் என கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் உருவாக்கிய படம் தக் லைப். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த படத்தில் இருந்து ஜிங்குச்சா, சுகர் பேபி ஆகிய இரு பாடல்கள் வெளியாகியுள்ளன. இவை இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
அது போல் படத்தின் டிரெய்லர் வெளியானது. அது 40 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்தது. அபிராமிக்கு உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து படத்தின் பிரமோஷனுக்கான விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். படக்குழுவை யூகிசேது பேட்டி எடுத்தார்.
அப்போது அவர் " படத்தின் டிரைலரில் நான் பார்த்து வியந்த விஷயம், கமல் ஹாசனும் நீங்களும் (அபிராமி) முகத்திற்கு முகம் வைத்து பேசிக் கொள்கிறீர்கள். த்ரிஷாவுக்கு கூட பின்னால் இருந்துதான் முத்தம் கிடைத்தது. ஆனால் உங்களுக்கு உதட்டிலேயே முத்தம் கொடுத்துவிட்டாரே என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியை மொத்த படக்குழுவும் சிரித்துக் கொண்டே எதிர் கொண்டது. இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், " இதெல்லாம் நாங்கள் விருமாண்டியிலேயே ரிகர்சல் பார்த்துவிட்டோம், விடுங்க சார்" என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் லிப் லாக்கிற்கு பெயர் பெற்றவர் கமல்ஹாசன். இதனாலேயே இவருடன் நடிக்க சில நடிகைகள் மறுத்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான படம்தான் விருமாண்டி. இந்த படத்தில் கமலும் அபிராமியும் நடித்திருந்தனர். அந்த படத்திலும் உதட்டு முத்தம் கொடுத்து நெருக்கமாகவே நடித்திருந்தனர்.
இந்நிலையில், தல் லைஃப் படத்திலும் இருவரும் உதட்டு முத்தமிட்டுக் கொள்வதால் ரசிகர்கள் செம எதிர்பார்ப்போடு படத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். விருமாண்டி படத்தில்தான் இருவரும் ஜோடி சேர்ந்து வாழவில்லை. இந்த படத்திலாவது இவர்கள் கணவன் மனைவியாக சேர்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications