Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரத்தில் தொங்கிய சாப்பாடு.. கமல்ஹாசன் கொட்டகை.. அரசு பஸ்ஸில் அப்பா! எப்பேர்ப்பட்டவரின் மகன்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகிஸ்தான் பிரிவினை நேரத்தில், இந்து-முஸ்லிம் கலவரம் வந்தபோது, சீனிவாசனை "யாகூப் ஹாசன்" என்ற முஸ்லிம் காப்பாற்றி பாதுகாத்தார்.. அந்த நன்றிக்காகத்தான், "ஹாசன்" என்ற இஸ்லாமிய பெயரை தன்னுடைய பிள்ளைகளுக்கு வைத்தார் கமல்ஹாசனின் அப்பா சீனிவாசன் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் முக்தா ரவி. அத்துடன் கமல்ஹாசனை பற்றியும் பல்வேறு விஷயங்களை கூறி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

Wow Tamizha என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள முக்தா ரவி, "கமல்ஹாசன், ராதாரவி, பி.சி. ஸ்ரீராம், இவர்கள் எல்லாம் பால்ய நண்பர்கள்.. ஒன்றாக கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பார்கள் என்ற கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே நண்பர்களாக இருந்தார்கள்..

Television Government Bus Kamal Haasan

நண்பர்களிடம் எளிதாக பழகுவார்

கமல் அனைவரிடமும் பழகக்கூடியவர்.. நண்பன்தானே? என்பதற்காகவே அவர்களுக்கு சான்ஸ் தந்துவிட மாட்டார் கமல்.. உண்மையிலேயே தன்னுடைய நண்பர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் திறமைசாலி என்றால் கண்டிப்பாக வாய்ப்பு தருவார்..

நாயகன் படத்தில் மணிரத்னத்துடன் ஒன்றிணைந்தார். நாயகன் ஹிட்டானதுமே கமல், மணிரத்னம் இருவருக்கும் நிறைய படங்கள் கிடைத்தன.. .. அதற்கு பிறகு இப்போது மீண்டும் தக்லைஃப் படத்தில் இணைந்துள்ளனர்..

நாயகன் - இலக்கம்

கமல்ஹாசன் போல கடின உழைப்பாளரை எங்குமே பார்க்க முடியாது.. அந்த அளவுக்கு இறங்கி பணிபுரிபவர்.. உடம்பை வருத்திக் கொள்வார்.. நீளமாக பல் வேண்டுமானால், உடனே பல் டாக்டரை சந்தித்து, அதற்கேற்றவாறு பற்களை சரிசெய்வார்..

சாதாரண கண்ணாடி போட வேண்டுமானாலும், கண்ணுக்குள் லென்ஸ், அதுக்குள்ளே இன்னொரு லென்ஸ், பிறகு கண்ணாடி போட்டு நடிப்பார்.. அதாவது மூளை நரம்புகளில் பிரச்சனை வந்துவிடும் அளவுக்கு கண்ணாடி விஷயத்தில் சிரத்தை எடுத்து கொள்வார்..

நடிப்புக்கு இலக்கணம்

நாயகன் படத்தில் தன்னுடைய நடிப்புக்கென்று ஒரு அளவுகோல், இலக்கணம் வைத்திருந்தார். அந்த படத்தில் மனைவி இறந்தபோது, கமல் இளமையாக இருப்பார்.. ஆனால், அழ மாட்டார்.. தன்னை வளர்த்த வாப்பா இறந்தபோதும் கமல் கதறி அழவில்லை.. ஆனால், மகன் இறந்ததுமே கதறி அழுகிறார்.. இதற்கு காரணம், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, யாராக இருந்தாலும் உணர்ச்சி வசப்படுவார்கள்..

இதை மையப்படுத்திதான், நாயகன் படத்தில் மகன் சடலத்தை பார்த்து கதறி அழுதார்.. இப்படி அழும்போது, ஓவர் ஆக்டிங் போலதான் தெரியும்.. ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள்.. மனோஜ் இறந்தபோது, மகனே என்று பாரதிராஜா கதறி அழுவதை பார்க்கும்போது, நமக்கே அழுகையாக வந்தது.

கொட்டகையில் கமல்

கமலின் குடும்பத்தில் பலரது ஆதரவு கிடைத்தாலும், சினிமாவில் போராடித்தான் மேலே வந்தார்.. மூன்று முடிச்சு படத்தில் ரஜினி தங்கியிருக்கும் கொட்டகை ஒன்று இருக்கும்.. அந்த ஒற்றை ரூமில்தான் கமல் தங்கியிருப்பார்.. சாப்பாடு கூட டோக்கன் வாங்கி வைத்து சாப்பிட்டதாக எனக்கு ஞாபகமிருக்கு.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கமல் நாடகங்களில் நடித்தார்.. டான்ஸ் அசிஸ்டெண்டாக இருந்தார்.. புரட்சிதாசனிடம் ஏதாவது எழுதி கொண்டிருப்பார்.. எங்காவது டப்பிங் செய்து கொண்டிருப்பார்.. எங்காவது சென்று தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் கமலுக்கு இருந்தது.. இன்றும் அவர் AI படிப்பதற்கு இதுதான் காரணம்.,

காமராஜரிடம் கோபம்

கமலின் அப்பா சீனிவாசன் ஒரு தீவிரமான காங்கிரஸ்காரர்.. காந்தீயவாதியும்கூட.. எனவே, அவரது துணியை அவரே துவைத்து கொள்வார்.. அவரை பார்த்து காமராஜரே பயந்தார்.. காங்கிரஸை பிரித்து விட்டதாக சொல்லி, காமராஜரிடம் கமலின் அப்பா பேசாமல் போய்விட்டாராம்.

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தின்போது, அதில் பங்கேற்றவர்களுக்கு வழியில் சாப்பாடு கிடைக்காது என்பதால், சாலையோரங்களில் உள்ள மரங்களில் சாப்பாடும், தண்ணீரும் கட்டி தொங்கவிட்டாராம் கமலின் அப்பாவும், அவரது நண்பர்களும்.. பிரிட்டிஷ் காலத்தில் இப்படியெல்லாம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர் கமலின் அப்பா....


எளிமையான காந்தீயவாதி

கமலின் அப்பா சீனிவாசன் மிகவும் எளிமையானவர்.. அப்போது கமலுக்கும் சொந்தமாக கார் இருந்தது, சுஹாசினியும் நடிக்க வந்துவிட்டார்.. பிள்ளைகள் எல்லாம் காரில் போனால், அப்பா மட்டும் 20 பைசா டிக்கெட் வாங்கி, 12B அரசு பஸ்ஸில் ஆழ்வார்பேட்டையில் இறங்கி செல்வதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன்.

தியாகிகள் பலரும் பெட்ரோல் பங்க்குகளை வைத்து அப்போது நிறைய சம்பாதித்தார்கள்.. ஆனால், கமலின் அப்பா அப்படி எதுவுமே கேட்டதில்லை.. தியாகி என்ற பெயரை கொண்டு எந்த லாபத்தையும் அடைந்ததில்லை..

ஹாசன் பெயர்

பாகிஸ்தான் பிரிவினை காரணமாக, இந்து-முஸ்லிம் கலவரம் வந்தபோது, சீனிவாசனை "யாகூப் ஹாசன்" என்ற முஸ்லிம் காப்பாற்றி பாதுகாத்தார்.. அந்த நன்றிக்காகத்தான், "ஹாசன்" என்ற இஸ்லாமிய பெயரை தன்னுடைய பிள்ளைகளுக்கு வைத்தார் சீனிவாசன். கதர் சட்டை, கதர் வேட்டியுடன் காணப்படுவார்.. ஒரு முன்னணி வழக்கறிஞர் என்பதால் பெரிய சம்பளம் கிடைக்கும்.

அப்போது நேரு கேட்டார் என்பதற்காக வீட்டிலிருந்த நகைகளை எல்லாம் அள்ளி தானம் தந்தார்.. அந்த காங்கிரஸ் பற்றுதான் கமலுக்கு இப்போதும் தொடர்வதாக நினைக்கிறேன்" என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+