நாகேஷை "கொலை" செய்ய நினைத்த கமல்ஹாசன்.. காரணம் இதுதானா? கடைசி காலத்தில் இத்தனை சோகங்களா?
சென்னை: தமிழ் சினிமாவின் பல்துறை வித்தகர் காமெடி, நடனம்,வில்லன் என்று பல துறைகளில் தன்னுடைய முத்திரையை ஆழமாக பதித்து, அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களுக்கு வழிகாட்டியாய் இருக்கும் முதுபெரும் நடிகர் நாகேஷ்.
அவர் குறித்து பல சுவாரஸ்யமான பல தகவல்களை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ இனையத்தில் அனைவராலும் ஆச்சரியத்துடன் ரசிக்கப்பட்டு வருகிறது.
அந்தக் காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதற்கு என்று சுருட்ட முடி,சிகப்பு நிறம், ஆஜனு பகுவான உடலமைப்பு,போன்ற அடிப்படை தகுதிகள் இருந்த நிலையில் இதில் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் முகங்களில் கரும்புள்ளியுடன் ஒல்லியான தேகத்தோடு, நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்தவர் நாகேஷ். நடிக்க வந்த புதிதில் பலரின் கேலிகளுக்கும் கிண்டலுக்கும் ஆளானவர்.
இருந்தாலும் தனது நடிப்பின் மீது இருந்த நம்பிக்கையாலும் தன்னுடைய விடாமுயற்சியினாலும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உருவெடுத்தார்.சர்வர் சுந்தரம் படம் கிட்டத்தட்ட இவரது உண்மை கதையை வைத்து எடுத்ததாகும்.தினமும் விடிந்ததும் நாகேஷ் வீட்டின் வாசலுக்கு நான்கைந்து பட கம்பெனி கார்கள் வந்து நிற்குமாம். அந்த அளவிற்கு பிஸியாக நடித்து வந்துள்ளார்.

பல நாட்கள் இவரது டிரெஸ்ஸிங் ரூம் கார்தானம். ஒரே நேரத்தில் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நாகேஷ் ஓய்வின்றி உறக்கம் இன்றியும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு நடித்து வந்ததால் கொஞ்சம் ரிலாக்ஸேஷனுக்காக மது அருந்தும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளார். பல மூத்த நடிகர்கள் மது பழக்கத்தை குறித்து எச்சரித்தும் நாகேஷ் அதைத் தொடர்ந்து வந்ததால் கிட்டத்தட்ட மது பழக்கத்திற்கு அடிமையான நிலைக்கு சென்றுள்ளார்.
புது புது அர்த்தங்கள் படத்தில் வரும் ஓவர் பிஸியாக இருக்கும் ஜனகராஜ் வித்வான் கேரக்டர் நாகேஷை மனதில் வைத்து உருவாக்கியதாக அதன் இயக்குனர் கே.பாலச்சந்தர் ஒரு முறை தெரிவித்துள்ளாராம். கே. பாலச்சந்தர் கமலை வைத்து படங்களை இயக்கும் பொழுது ஒரு சில காட்சிகள் நான்கைந்து டேக் வாங்குவாராம்.
அப்படி டேக் வாங்கும் பொழுது கே.பாலச்சந்தர் கமலிடம் கோபத்துடன் இதுவே என் நாகேஸ் ஆக இருந்திருந்தால் ஒரே டேக்கில் ஓகே செய்திருப்பான் என்று குத்தி காட்டி கமலை திட்டுவாராம். இந்த மாதிரியான திட்டுகளை அடிக்கடி கேட்ட கமல் இந்த நாகேஷ் எப்போதாவது கையில் சிக்கினால் தலையணை வைத்து அமுக்கி கொன்று விட வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு நாகேஷ் மீது கமல் கோபத்திலெல்லாம் இருந்துள்ளாராம்.
நாளடைவில் கமலுடன் நாகேஷ் இணைந்து நடிக்கும் பொழுது தான் இயக்குனர் கே பாலச்சந்தர் சும்மா சொல்லவில்லை உண்மையிலேயே நாகேஷ் பிறவி கலைஞன் தான் என்று மனதில் ஏற்றுக் கொண்டுள்ளார். பல படங்களில் கமல் அடுத்தடுத்து நாகேஷை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.இன்னமும் தமிழ் சினிமா முழுமையாக பயன்படுத்திராத ஒரு நடிகர் நாகேஷ் என்றும் சொல்வாராம் கமல்.
நாகேஷ் இறப்பதற்கு முன்பு கூட கமலையும் கிரேசி மோகனையும் தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்த அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.திரையில் காமெடி நடிகராக இருந்தாலும் நிஜத்தில் நாகேஷின் வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாகவும் மகிழ்ச்சியாகவும் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் அவருடைய மனைவியின் திடீர் மரணம் நாகேசுக்கு பெரும் சறுக்கலாக அமைந்தது.
அவருடைய மனைவியின் மரணத்தின் போது அவரது மரணம் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்கள் பரவினாலும் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் தான் நாகேஷை எந்தவித பிரச்சினையிலும் சிக்கிக் கொள்ளாமல் காப்பாற்றியுள்ளாராம். தன்னுடைய மகன் பெரிய அளவில் திரை துறையில் ஜொலிக்க முடியாமல் போன வருத்தமும் இறுதிவரை அவரை வாட்டி வதைத்தது.இவ்வாறு பல தகவல்களை பகிர்ந்து நாகேஷின் நினைவுகளை புதுப்பித்துள்ளார்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications