சோசியலில் ட்ரோலாகும் விஜய் சேதுபதி!மீண்டும் பிக்பாஸை தொகுத்து வழங்க போகும் கமல்ஹாசன்? அப்போ VJS?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது என்னாச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இந்த பிக்பாஸ் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வந்தார். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 8 நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கமல்ஹாசன் தக் லைஃப் ஷூட்டிங்கில் இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன் பின்னர் இந்த நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன், சிம்பு உள்ளிட்டோர் தொகுத்து வழங்குவார்கள் என சொல்லப்பட்டது.
அது போல் தயாரிப்பு நிறுவனம் விஜய் சேதுபதியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் விஜய் சேதுபதியை ஃபிக்ஸ் செய்தனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கப்பட்டது.
விஜய் சேதுபதிக்கு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஊதியமாக ரூ 10 லட்சம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி மேடைகளில் நன்றாக பேசுவார் என்பதால் இந்த நிகழ்ச்சியை அவர் எப்படி தொகுத்து வழங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆரம்பத்தில் பல்வேறு டிவிஸ்ட்கள் இருந்தன. ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்டு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தன்னுடைய பாணியில் ஆரம்பம் முதலே இன்றளவு வரை போட்டியாளர்களை கடுமையாக பேசி வருகிறார்.
இது ஒரு கட்டத்தில் ஆண் போட்டியாளர்களிடம் எரிச்சலை ஏற்படுத்துவதாக தெரிகிறது. நேற்றைய தினம் சாச்சனாதான் வெளியேறுவதாக இருந்ததாகவும் விஜய் சேதுபதியின் தலையீட்டால் தொடர்ந்து சாச்சனா காப்பாற்றப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
மகாராஜா படத்தில் இருந்து விஜய் சேதுபதி இன்னும் வெளியே வரவில்லை என்றும் அப்பா மகள் பாசத்தால் விஜய் சேதுபதி ஓவராக ஆட்டம் போடுகிறார் என சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதியால் கமல் எப்போது வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அடுத்த சீசனில் இருந்து கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கோவை தங்கவேலு, பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்த முறை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அமெரிக்கா சென்றதால் அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த முறை தொகுத்து வழங்க முடியவில்லை என தெரிவித்திருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications