இன்னும் 5 நாள் தானே இருக்கு... உங்க க்ளூ எல்லாம் அவ்ளோதானா?

பிக்பாஸ் சீசன் 2வுக்கான கவுண்ட் டவுன் தொடங்கியதாக புதிய புரோமோ ஒளிபரப்பாகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    5 நாள் தானே இருக்கு...உங்க க்ளூ எல்லாம் அவ்ளோதானா?- வீடியோ

    சென்னை: பிக்பாஸ் சீசன் 2 இன்னும் ஐந்து நாளில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான புதிய புரோமோ தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

    கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் அதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக எதிர்பார்த்தனர்.

    ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது மீண்டும் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

    பிக்பாஸ் சீசன் 2:

    பிக்பாஸ் சீசன் 2:

    வரும் ஞாயிறு முதல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. மீண்டும் விஜய் டிவியிலேயே இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் பாகத்தை தொகுத்து வழங்கிய கமலே, இதனையும் தொகுத்து வழங்குகிறது.

    க்ளூ:

    க்ளூ:

    இதற்கான புரோமோக்கள் கடந்த மாதத் துவக்கத்திலேயே விஜய் டிவியில் வெளிவரத் தொடங்கியது. நான்கைந்து விதமான புரோமோக்கள் தற்போது ஒளிபரப்பப் படுகின்றன. சிலவற்றில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறவர்கள் பற்றி கமல் சில க்ளூக்களைக் கொடுத்தார்.

    5 தினங்கள் மட்டுமே:

    இந்நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஐந்து தினங்களே உள்ளன. இந்நிலையில், இன்று புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் ஐந்து தினங்களே உள்ளது எனக் கூறுகிறார்.

    வதந்திகள்:

    வதந்திகள்:

    ஆனால், தொடர்ந்து வரும் விளம்பரங்களில் பிக்பாஸ் வீட்டில் குடியேறப் போகிறவர்கள் பற்றி, கமல் மேலும் க்ளூ கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது வெளியாகாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பை சாதகமாக்கிக் கொள்ளும் சிலர், இவர் தான் பிக்பாஸ் போட்டியாளர் என பலரது பெயர்களை சமூகவலைதளங்களில் உலவ விட்டு வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+