ஜோதிகா செய்த தப்பே இதுதான்.. அதுவும் இன்சல்ட் பண்ற மாதிரி? படார்னு சொன்ன நடிகர் ராதா ரவி.. என்னவாம்?
சென்னை: தியேட்டருக்கு வெளியே யூடியூப் சேனல்கள் படம் தொடர்பான விமர்சன பேட்டிகளை எடுக்க கூடாது, அதனால்தான் கங்குவா படம் தோல்வியை சந்தித்தது என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருந்தார். இதுகுறித்து பிரபல நடிகர் ராதாரவி தன்னுடைய கருத்தை தெரித்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், கங்குவா பட தோல்வி குறித்தும், அதற்கான காரணத்தையும் கூறியிருந்தார்.

விமர்சனங்கள்: "தரமற்ற முறையில் செய்யப்படும் திரை விமர்சனங்களால், தொடர்ந்து திரைத் துறை மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால்தான் எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் விமர்சனத்தை எங்களால் தடுக்க முடியாது என்றாலும், சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை அணுக உள்ளோம்.
எனவே, எதிர்மறை விமர்சனங்களால் "கங்குவா" திரைப்படம் கடும் சரிவை சந்தித்துள்ளதால், தியேட்டருக்கு வெளியே யூடியூப் சேனல்கள் படம் தொடர்பான விமர்சன பேட்டிகளை எடுக்க கூடாது" என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, New Filmalaya என்ற யூடியூப் சேனல், பிரபல நடிகர் ராதாரவியிடம் கருத்து கேட்டது. அதற்கு ராதாரவி சொன்ன பதிலின் சுருக்கம்தான் இது:
சிவக்குமார் குடும்பம்: "சூர்யாவுக்கு திருப்பூர் சுப்ரமணியம் உறவினர், அதனால்தான் அப்படியெல்லாம் சொன்னதாக சொல்றாங்க.. அதெல்லாம் பொய்யான தகவல்.. கங்குவா படத்தை பொறுத்தவரை, ஜோதிகா செய்த தவறு என்னவென்றால், முதல் அரை மணி நேரம் படம் சரியில்லை என்று சொன்னதுதான்.. ஜோதிகா அப்படி சொல்லியிருக்கக்கூடாது.
அவர் சொன்னப்பிறகு அரை மணி நேரம் படத்தை வெட்டிட்டாங்க என்று கேள்விப்பட்டேன். அப்போதும் சரியில்லையாம்.. படம் நல்லா இருக்கோ, இல்லையோ, இதையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது. சூர்யா இந்த படத்தில், தன்னையே தியாகம் செய்து நடித்துள்ளார். எல்லாவிதமான உடற்பயிற்சிகளையும் செய்வார்.. கார்த்திகைவிட அதிகமாக எக்ஸர்சைஸ் செய்யக்கூடியவர் சூர்யா.. அப்படியே சிவக்குமார் அண்ணன் மாதிரியே உடற்பயிற்சியில் சிறந்தவர்.
கூட்டமில்லை: நானும் கங்குவா படத்தை தியேட்டரில் போய் பார்த்தேன்.. வெளிப்படையாக சொல்லணும்னா, தியேட்டரில் கூட்டம் இல்லை.. சூர்யா படத்தில் கார்த்திக் நடிச்சால் என்ன? அண்ணனை விட்டுக் கொடுத்துருவாரா தம்பி? ஒன்னா நடித்தால் என்ன தப்பு? தப்பே கிடையாது.
450 கோடி, 45 கோடி கலெக்ஷன் ஆயிடுச்சுன்னு என்றெல்லாம் சொல்லத்தான் செய்வாங்க.. ஹைப் பண்ணதான் செய்வாங்க.. சினிமா என்பதே ஏமாற்று வேலைதானே? அடிக்கிற மாதிரி அடிப்போம், அழுகிற மாதிரி அழுவோம் என்பதுதான் சினிமா..
இன்சல்ட்: சினிமாவில் நான் நடித்த 400 படங்களில் கிட்டத்தட்ட 300 படங்களில், பெண்களுக்கு தாலி கட்டியிருக்கிறேன். அதெல்லாம் உண்மையா என்ன? சினிமா படம் விற்பனை செய்ய ஆயிரம் சொல்லுவாங்க. அதனால், படம் எப்படி வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும், முதல்ல நம்ம படங்களை, நாமளே இன்சல்ட் பண்ணக்கூடாது இல்லையா" என்றெல்லாம் பேசியிருக்கிறார் ராதாரவி.
2 கேள்விகள்: சில தினங்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில், "ஜோதிகாவிடம், 2 கேள்விகளை கேட்க நான் விரும்புகிறேன்.. உங்க வீட்டுக்காரர்தானே "கங்குவா" படத்தின் கதாநாயகன்.. நீங்க மும்பையில் இருந்துட்டே, இந்த படத்தின் புரமோஷனுக்கு ஏன் வரல?
கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா, பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.. அந்த இசை வெளியீட்டு விழாவுக்கும் நீங்கள் வர மறுத்தது ஏன்? புறக்கணித்தது ஏன்? அப்போதெல்லாம் கணவன் நடித்த படம் என்று உங்களுக்கு அக்கறை இல்லையா? படம் சரியாக போகல்விலை என்றதும் வானத்துக்கும், பூமிக்கும் எகிறி குதிப்பது ஏன்? என்பதுதான் என்னுடைய கேள்வி" என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications