Kanguva OTT: இன்று ஓடிடியில் ரிலீஸான கங்குவா படம்! சூர்யா ரசிகர்கள் கடும் அதிருப்தி! ஏன் என்னாச்சு?
சென்னை: நடிகர் சூர்யா, பாபி தியோல் நடித்த கங்குவா படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகும் என்ற அறிவிப்பை கண்ட சூர்யா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
இந்த படம் சுமார் ரூ 350 கோடியில் எடுக்கப்பட்டதாகும். இதை இயக்கியவர் சிறுத்தை சிவா. கங்குவா திரைப்படத்தின் போஸ்டர் வெளியான நாள் முதலே இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த படம் இரு வெவ்வேறு கால கட்ட நிகழ்வுகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஞானவேல் ராஜா, படத்தை தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தில் திஷா பதானி, நட்டி, கருணாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ, கோவை சரளா, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வெளியான நாள் முதல் எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்த படத்திற்கு சிவா ஹைப் ஏற்றிவிட்டு அவுட்புட்டில் ஒன்றுமே இல்லை என்று சூர்யாவையும், சிவாவையும் படம் பார்த்துவிட்டு வந்தவர்கள் வறுத்தெடுத்தனர்.
ரூ 350 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ 100 கோடிதான் வசூலித்தது. இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் வேட்டையன் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால் படம் நவம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாவதிலும் சிக்கல் எழுந்தது. பிறகு ஒரு வழியாக படம் வெளியானது. இந்த படத்தில் பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாக விமர்சனம் எழுந்ததை அடுத்து அதன் ஒலியின் அளவு குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த சூர்யாவையும் அவரது குடும்பத்தினரையும் பலர் யூடியூப் சேனல் பேட்டிகளில் தரக்குறைவாக பேசியிருந்தனர். இது கண்டனத்திற்குள்ளானது. இதையடுத்து நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
கங்குவா படம் குறித்து சூர்யாவின் மனைவியாக இல்லாமல் சினிமாவை நேசிப்பவராக நான் சில விஷயங்களை சொல்லிக் கொள்கிறேன். முதலில் சூர்யாவை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. தமிழ் சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் உங்கள் கனவை நனவாக்கியுள்ளீர்கள்.
கண்டிப்பாக கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் சப்தம் பிரச்சினையாகவே இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மொத்தம் 3 மணி நேரம் வெளியான கங்குவா படத்தில் ஒரு அரை மணி நேரம்தான் அப்படியிருக்கிறது. தமிழ் சினிமாவில் இது போல் கேமரா பயன்பாடுகளை பார்த்ததே இல்லை. பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் நன்றாகவே இல்லாத படங்களுக்குகூட இத்தகைய விமர்சனங்கள் வந்ததில்லை.
ஆனால் ஊடகங்களில் இருந்து கங்குவாவுக்கு எதிராக இது போன்று எதிர்மறையான விமர்சனங்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். பெண்களை இழிவாக சித்தரித்து இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படங்களுக்கு கூட இப்படி விமர்சனங்கள் வந்ததில்லை. படம் வெளியான முதல் நாளே இது போன்று அவதூறுகள் பரப்பப்பட்டன.
கங்குவா படத்தில் இருந்த நல்ல விஷயங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களுக்கு ஸ்கோப் இருக்கிறது. சிறுவனின் அன்பு, கங்குவாவின் பழிக்கு பழி போன்றவை எல்லாம் உங்களுக்கு தெரியவில்லை. ஒரு படத்தை விமர்சனம் செய்யும் போது நல்ல விஷயங்களை எல்லாம் மறந்துவிடுகிறீர்கள்.
படம் வெளியான முதல் நாளே கங்குவா குறித்து நெகட்டிவ் கமென்ட்டுகள் வெளியானது வருத்தமளிக்கிறது. 3 டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கங்குவா படக்குழு எடுத்த முயற்சிகளுக்கும் படத்தின் கான்செப்ட்டுக்கும் பாராட்டுகளை தெரிவிக்காமல் எதிர்மறை விமர்சனம் ஏன், குறைகள் இல்லாமல் படம் எடுக்க முடியாது.அதற்காக ஒட்டுமொத்த படத்தையும் குறைக் கூற கூடாது. கங்குவா படம் குறித்த எதிர்மறை விமர்சனங்களை படக்குழுவினர் புறந்தள்ள வேண்டும் என ஜோதிகா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இந்த படம் சூர்யா ரசிகர்களுக்குக் கூட ஒரு சிலருக்கு பிடித்திருந்தது. ஒரு சிலருக்கு பிடித்திருக்கவில்லை. இந்த நிலையில் இந்த படம் இன்றைய தினம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஓடிடியில் வெளியாகிறது. ஆனால் இந்தியில் இந்த படம் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஓடிடியில் ரிலீஸாகும் என்ற அறிவிப்பிலேயே இந்தி மொழி எங்கே என கேட்டுள்ளனர். இந்தியில் மொழிபெயர்த்தாவது வெளியிடுங்கள் என ஒரு நெட்டிசன் கேட்டுள்ளார். அது போல் இன்னொருவரோ இந்த இந்தியில் ரிலீஸாவதற்கு மட்டும் ஏன் காலதாமதம் ஆகிறது என எனக்கு புரியவில்லை என்றார்.
இந்த படத்தின் நீளம் 2 மணி நேரம் 36 நிமிடங்களாகும். ஆனால் அமேசான் பிரைம் 15 நிமிடங்கள் காட்சிகளை கட் செய்துள்ளது என்கிறார். இந்த படத்தில் சூர்யா, பிரான்சிஸ், கங்குவா என்ற இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படம் குறித்த உங்கள் கருத்துகளை கமென்டில் குறிப்பிடுங்கள். மேலும் நீங்கள் அண்மையில் எந்த படத்தை ஓடிடியில் பார்த்தீர்கள் என்பதையும் குறிப்பிடுங்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications