3 மாதத்தில் 12 கிலோ எடை குறைத்த பிரபல இயக்குநர்.. காரணம் "காரக்குழம்பாம்".. அது எப்படி?
சென்னை: 3 மாதத்தில் 12 கிலோ எடையை குறைத்துள்ள குக் வித் கோமாளி கனியின் கணவர் இயக்குநர் திரு. இவர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இயக்குநர்களில் ஒருவர் திரு. இவர் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார்.
இதைத் தொடர்ந்து விஷால் நடித்த சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களும் திருவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தன. அது போல் கார்த்திக் கவுதம் கார்த்திக் நடிப்பில் மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்த படம் அத்தனை வெற்றியை தரவில்லை.

அதன் பிறகு இயக்குநர் திரு இயக்கத்தில் எந்த படமும் இதுவரை வெளியாகவில்லை. இவர் வேறு யாருமில்லை , நம்ம காரக்குழம்பு கனியைத்தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கனி- இயக்குநர் அகத்தியனின் மகளாவார். கனி விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனிதான்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். கனி யூடியூப் சேனல் வைத்து சமையல் குறிப்புகளை சொல்லி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய கணவர் தனது உடல் எடை குறைப்பு குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் 3 மாத பிட்னஸ் சேலஞ்ச் எடுத்துக் கொண்டேன்.
நான் 76 கிலோவிலிருந்து 65 கிலோவுக்கு எடை குறைந்துள்ளேன். இதை உங்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த எடை குறைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. 3 மாத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, சுய தேடல் என மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் இந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் இப்போது முன்பை விட வலிமையாக இருக்கிறேன்.
நான் தினமும் உடற்பயிற்சி செய்ய ரொம்ப கஷ்டப்பட்டேன். இதை விட்டுவிடலாம் என்று கூட நினைத்தேன். ஆனால் கனியின் தொடர்ச்சியான ஆதரவு, ஊக்கம்தான் என்னை தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வைத்தது. இதில் நான் கற்றுக் கொண்டது என்ன தெரியுமா, மன தைரியம், உறுதி இருந்தால் எந்த விஷயமும் நிச்சயம் கிடைக்கும் என்பதுதான். உங்களை நீங்கள் நம்புங்கள் உங்களை சுற்றி நேர்மையான எண்ணம் கொண்டவர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications