குடுகுடுப்பை காரன் குறியை மாத்தி சொல்லிட்டானே.. ரவிக்கையை மாத்திப் போட்ட கண்மணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலின் நாயகன் திருவுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்னு சொல்ற மாதிரி மூளை சர்ஜரியில் ஆனந்தியை காதலிச்சது, கல்யாணம் செய்துக்கிட்டது எல்லாம் மறந்தே போச்சு.

ஆனந்தியின் தோழி கண்மணி சூழ்நிலை காரணமாக கர்ப்பம்னு நடிக்க வேண்டிய சூழல். இது கண்மணி புருஷன் செழியன் மேல ஆசை வச்சு இருக்கும் சுஹாசினிக்கு தெரிஞ்சுருது. ஆனா, சற்குணம் அத்தைக்கு இதை எப்படி சொல்றதுன்னு தெரியாம தவிக்கறா சுஹாசினி.

செழியனின் தம்பியுடன் சேர்ந்து குடுகுடுப்பை காரன்னு ஒருத்தனை செட் பண்றாங்க. இந்த வீட்டுல பொய் நடமாடுது. கர்ப்பம்னு பொய் சொல்லி ஒரு பொண்ணு நாடகமாடுதுன்னு சொல்ல சொல்றாங்க.

ஜக்கம்மா

ஜக்கம்மா

நடுராத்திரியில் சொல்லி வச்ச மாதிரி குடுகுடுப்பை காரன் வந்து, இந்த வீட்டுல பொய் ஒண்ணு நடமாடுது. நாளைக்கு அது வேஷம் கலைய போவுது. இந்த வீட்டுல பெரும் பூகம்பமே உருவாக போவுது. அந்த பொய் வீட்டை விட்டு ஓடப்போவுதுன்னு சொல்லிட்டு போயிடறான்.

கவலை

கவலை

என்ன குடுகுடுப்பைக்காரன் நடு ராத்திரியில இப்படி சொல்லிட்டு போறானே.. சரி நாளைக்கு காசு வாங்க வருவான்ல.. அப்போ பார்த்துக்கலாம்னு சொல்லிட்டு தூங்கிடறாங்க. கண்மணியும் இதைக் கேட்டு கவலைப்படறா.

தங்க நிற ரவிக்கை

தங்க நிற ரவிக்கை

சுஹாசினி நீ சொல்ல போற பொண்ணு ப்ளூ கலர்ல சேலையும், தங்க நிறத்துல ரவிக்கையும் போட்டு இருப்பான்னு அடையாளம் சொல்றா. சரிம்மா சரியா சொல்லிடறேன்னு சொல்றான் குடுகுடுப்பை காரன்.

தையல்

தையல்

கண்மணியும், இரண்டாவது மருமகள் சுமதியும் ஒரே நிறத்தில் சேலைக் கட்டி, ஒரே நிறத்தில் ரவிக்கை போட்டுக்கிட்டு வர்றாங்க. திடீர்னு பார்த்தா கண்மணி ரவிக்கை தையல் பிரிஞ்சு உடம்பு தெரியுது...அக்கா என்னக்கா ரெண்டு பேரும் ஒரே மாதிரி புடவை கட்டிக்கலாம்னு சொன்னா, உங்க ரவிக்கை இப்படி ஆயிருச்சேன்னு சொல்றா. கவலைப்படாத சுமதி ரவிக்கை மட்டும் வேற போட்டுக்கறேன்னு சொல்லிட்டு வேற மாத்திக்கறா.

அறியாமல் குறி

அறியாமல் குறி

ரவிக்கை மாத்தி போட்டுக்கிட்டதை பார்த்து அதிர்ச்சி ஆகறா சுஹாசினி. ஆனா, குடுகுடுப்பைக்காரன் பொய் மேல பொய் சொல்லிகிட்டே போறான்.க டைசியில ப்ளூ சேலை, தங்க நிற ரவிக்கை போட்ட இந்த பொண்ணுதாங்க கர்ப்பம்னு பொய் சொல்லி நாடகமாடுது.. அடிச்சு துரத்துங்கன்னு சுமதியை சொல்ல..

அப்புறமென்ன, குறி மாத்தி சொன்னவனை சற்குணத்தம்மா மாத்து மாத்துன்னு மாத்தறாங்க..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+