கண்மணி மெதுவா போகுதே.. போரடிக்க ஆரம்பிச்சிருச்சே!
சென்னை:சன் டிவியின் கண்மணி சீரியல் கொஞ்சம் மெதுவா... போரா...போற மாதிரி இருக்கு. ஆரம்பத்துல கதையும் ஓரளவுக்கு எதிர்பார்ப்பில் இருந்துச்சு.
சரி, சின்னத் திரை ஸ்டார் காஸ்ட் நடிகர் சஞ்சீவ் நடிக்கறாரேன்னு பார்த்தா...அதுவும் வேலைக்கு ஆகலை. கதை நல்லா இருக்க வேணாமா...
கண்ணன் மாமா கண்ணன் மாமான்னு சவுண்டு சுத்தி சுத்தி வர அப்படியா ஒருத்தன் முட்டாளா இருப்பான்.அந்த மாதிரி ஒரு கேரக்டருங்க சஞ்ஜீவ்க்கு.

நீ திட்டுவே
யக்கா.. என்ன வேலையா இருக்கியான்னு தங்கச்சி கேட்க, ஆமா..கீரை ஆய்ஞ்சுக்கிட்டு இருக்கேனே தெரியிலியா..வா வந்து நீயும் செய்யேன்னு சொல்றா அக்கா. வேணாக்கா நான் லொடலொடன்னு பேசுவேன்..நீ திட்டுவேன்னு சொல்ல ..ஆமா, ரொம்ப ஒழுங்கு....நீதானே பேச வந்தேன்னு கேட்கறாங்க அக்கா

நம்ம சின்ன தங்கச்சி
சரிக்கா..நம்ம சின்ன தங்கச்சி முத்து செல்வி இருக்காளே அவ போற போக்கு சரியாவா இருக்கு.. அவளுக்கு அவ அப்பன் துணை போறதும், தங்கச்சி துணை போறதும் விரலுக்கு ஏத்த வீக்கம் மாதிரி தெரியலையேக்கா..

நீ மாட்டேன்னுடுவியா
ஏன்டி இப்படி ஒரு பவுசு வாழ்க்கை கிடைச்சா நீ மாட்டேன்னுடுவியான்னு அக்கா கேட்க தங்கச்சி கதைக்கு வருவியா..இது மாதிரி வாழ்க்கை எல்லாம் கமலின் தேவர் மகன், அதை பார்த்து எடுக்கற கண்மணி சீரியலில் மட்டும்தான்க்கா வரும்னு சொன்ன தங்கக்ச்சி, என்கேள்விக்கு பதிலை சொல்லுன்னு சொல்றா.

கூட
சொல்றேன் கேட்டுக்கடீ ..எந்த பொண்ணா இருந்தாலும் தாய் மாமனுக்கு அடுத்தபடிதான் அவ மேல எந்த ஆணுக்கா இருந்தாலும் முன்னுரிமை. இதுல முத்துசெல்வி ஓரு கிராமத்துல இருந்து வந்து போடும் ஆட்டம் தாங்கத்தான் முடியலை.

நானும் சொல்றேன்..
அதாங்க்கா நானும் சொல்ல வரேன்..மூக்குத்தி குத்திவிட சின்னவரு வேணுமாம். அவரு கூட போட்டோ எடுத்துக்கணுமாம். சவுந்தர்யா அம்மா, நானும் என் மாமாவும் கல்யாணம் பண்ணிக்கறப்போ நீதான் எல்லா வேலையும் செய்யணும்னு முத்து செல்விகிட்ட எவ்ளோ ஆசையா சொன்னா..அவ மனசை கஷ்டப்படுத்தறோம்னு தெரிஞ்சுக்காத வெள்ளந்தியா முத்து செல்வி?

மட்டுமா
அது மட்டுமா, சமையல்காரர் சவுந்தர்யா அம்மாவுக்கும், சின்னவருக்கும் கல்யாணம் நடக்கப் போவுதுன்னு சொல்லி,அதுக்குத்தான் கூத்து, திருக்கல்யாணம் செய்யறாங்கன்னு சொன்னாரே..அதோட அர்த்தம் கூடவாடி ஒரு பொண்ணுக்கு புரியாது.

சொல்லு
என்னதான் சொல்லுடி..கண்மணி கதையில ஓரு நாளைக்கு சின்னவரு சின்னத்தம்பி ஆகிடறாரு.... ஒரு நாளைக்கு முத்து செல்வி சின்ன தங்கச்சி மாதிரி ஆயிடறான்னு அக்கா சொல்ல, புரியுதுக்கா சின்ன தம்பிக்கு எதிர்பதம் சின்ன தங்கச்சி தானே..

பாவம்
சஞ்சீவ் பாவம்..ரொம்ப வருஷத்துக்கு பிறகு நல்ல வாய்ப்பு கிடைச்சுது. இதைத் தக்க வச்சுக்கற மாதிரி கதையும் நல்லாயிருந்தா சீரியலில் ரேட்டிங்கில் எப்படி இடம்பிடிக்கும்?
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications