என்னாது.. ஜீன்ஸ்..டி ஷர்ட்டை நீ போட்டுவிட போறியா..பயங்கரவாதமால்ல இருக்கு...
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்து செல்வி குடும்பத்தோடு ஊரை விட்டு வந்த கதை மனதை உலுக்குவதா இருந்துச்சு.
கிராமத்து பொண்ணுங்களுக்கு தைரியம், மன உறுதி ஜாஸ்தி என்பதை உணர்த்துவதாகவும் முத்து செல்வியின் கதை இருந்துச்சு.
என்னதான் ஏழ்மையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும், காதல் என்று வந்துவிட்டால் பணக்காரர், ஏழை என்கிற பாகுபாடு கண்ணுக்கு தெரியாது.

கண்ணனை நினைத்து
அக்கா முத்து செல்வி சின்னவரான கண்ணனை நினைச்சு உருகறதை பார்த்த அவளின் தங்கச்சி தங்கம் .. நான் போயி சின்னவர் கிட்ட உன் ஆசையை பத்தி சொல்லிடறேன்னு சொல்லிட்டு ஓடறா... வேணாம் தங்கம் அது சரி வராதுன்னு சொல்லிட்டு தங்கத்தை துரத்தி ஓடறா முத்து செல்வி.

கண்ணன் மாமாவுக்கு
மாமா...கண்ணை மூடிக்கோ, நான் அழைச்சுக்கிட்டு போயி உனக்கு ஒரு சர்பிரைஸ் தர போறேன்னு கண்ணனை தன்னோட ரூமுக்கு அழைச்சுட்டு போறா சவுந்தர்யா. இப்போ பாரு மாமான்னு கண்களை மூடி இருந்த கைகளை எடுத்துவிட்டு அவனிடம் காமிக்கறா..

ஷர்ட்டு..
அட பேண்ட் ஷர்ட்டுன்னு கண்ணன் சொல்ல, இல்ல மாமா அது ஜீன்ஸ் டி ஷர்ட்டுன்னு சவுந்தர்யா சொல்றா. போட்டுக்க சவுண்டு நல்லா இருக்கும்னு சொல்றான் கண்ணன். மாமா விளையாடாத.. உனக்கு ஆசையா நான் வாங்கிட்டு வந்தேன்னு சொல்றா சவுந்தர்யா. நீ விளையாடாத சவுண்டு.. வயக்காட்டுல வேலை பார்க்கற நான் இதை போட்டா எல்லாரும் சிரிப்பாங்கன்னு சொல்றான். வயக்காட்டுக்கு போம்போது வேஷ்டி கட்டிக்கோ மாமா, என் கூட வரும்போது இதை போட்டுக்கோன்னு சொல்றா.

நானே போட்டு விட்டுடுவேன்..
வேணாம் சவுன்டுன்னு கண்ணன் அடம்பிடிக்க, மாமா இப்போ நீ போடலை.. நானே உனக்கு போட்டு விட்ருவேன்னு சொல்றா. இது என்ன புள்ள இது.. பயங்கரவாதமால்ல இருக்கு.. சரி நீ போ போட்டுக்கிட்டு வரேன்னு சொல்றான். இங்கேயே மாத்து மாமான்னு நான் திரும்பிக்கறேன்னு சவுந்தர்யா சொல்ல, என்ன சவுன்டுன்னு கண்ணன் வெட்கப்பட..சரி கண்ணை மூடிக்கறேன் மாத்து மாமான்னு சொல்றா.

சவுண்டு நல்லாருக்கா
கண்ணன் உடையை மாத்திக்கிட்டு, சவுண்டு இப்போ பாரு நல்லாருக்கான்னு கேட்கறான். ஐயோ என் கண்ணே பட்டுரும் மாமா.. சரி என்னை வேலைக்கு டிராப் பண்ணுன்னு சொல்லி வண்டியில ரெண்டு பேரும் போறாங்க.

முத்து செல்வி, தங்கம்
சின்னவரே..சின்னவரேன்னு தங்கம் ஒடி வர, முத்து செல்வி அவளைத் துரத்தி வர, மாமா வண்டிய நிறுத்து மாமா.. அவதானே முத்துசெல்வின்னு கேட்கறா சவுந்தர்யா. எதுக்கு சவுண்டுன்னு கண்ணன் கேட்க அவளை கூப்பிடு மாமா பேசணும்னு சொல்றா சவுந்தர்யா.

இப்போ இந்த டிரஸ்
சும்மா இரு சவுண்டு..அவளுக்கு சும்மாவே வாய் அதிகம்.. கிண்டலடிப்பா.. இந்த டிரஸ்ல என்னை பார்த்தா இன்னும் வாய் கிழியும் அவளுக்குன்னு சொல்றான். சரி மாமா... இரு நானே பேசிட்டு வரேன்னு சொல்லிட்டு, தனக்கும், கண்ணன் மாமாவுக்கு கல்யாணம் நடக்க முத்து செல்வி வள்ளியா நடிச்சதுக்கு நன்றி சொல்றா.
உனக்கும் கண்ணன் மாமா நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பார்னு சொல்லிட்டு போயிடறா...பாவம் முத்து செல்வி..
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications