Kaatrin Mozhi Serial: மாச கணக்கா வாய் பேசாம இருக்கா.. மவுன விரதமாமே..!
சென்னை: விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் கண்மணி வாய் பேச முடியாத பெண். சந்தோஷ் அலுவலக கேன்டீனில் மாசக் கணக்கா காபி போடும் வேலை பார்க்கறா.
அவள் பிறந்த நாளுக்கு செல்போன் பரிசு வாங்கிக் குடுக்கும் சந்தோஷ், மவுன விரதம் இருக்கே இல்லே.. விரதம் முடிஞ்சு என் கூட பேசுனு சொல்றான்.
இதை ப்ரோமோவா போட்டுகிட்டு இருக்காங்க விஜய் டிவியில.. என்ன கொடுமை சரவணா இது?

திருட்டு போன டெண்டர்
டெண்டர் திருடு போகுது... அப்போ கண்மணி கஷ்டப்பட்டு சைகையில் சொல்றா...ஆஃ பீசில் திருடியவனை சைகையில காண்பிச்சு கொடுக்கறா. மாமா பெண் தீபிகா போதையில் மயங்கிக் கிடக்கும் போது, கெஸ்ட் ஹவுசில் தங்க வைக்க கண்மணிதான் உதவி செய்யறா. அப்பவும்தான் பேசலை

பெண் எப்படி
கூடவே இருக்கும் பெண் எப்படி இருப்பாள், வாய் பேச முடியாதவளா? என்ன ஏதுன்னு தெரியாமலா ஒருவன் இருப்பான்? வாய் பேச முடியாத ஒரு பெண்ணுக்கு வேலை போட்டு கொடுக்கும்போது கூடவா அவள் பேச முடியாதவள் என்று தெரியாது? என்னங்க கதை என்றால் கூட கூடை கூடையா காதுல பூவை சுத்தறீங்க?

தேவையில்லாத காட்சி
பிறந்த நாளுக்கு போனை பரிசாக வாங்குவானேன்... அதுக்கு என்று ஒரு காட்சியை வைப்பானேன்... மாசக் கணக்கில் பழகி அவள் வாய் பேச முடியாத பெண் என்று அறியாமல் மவுன விரதம் இருக்கே இல்லே.. விரதம் முடிஞ்சு பேசுன்னு சொல்ற மடையனை இந்த சீரியலில்தான் பார்க்க முடியும்.

கற்பனைக்கு பஞ்சம்
கற்பனைக்கு பஞ்சமாகிவிட்டது என்றால் எதையாவது எழுதிவிட வேண்டியது... அதையும் நாலு பேர் வேலை மெனக்கெட்டு காட்சியாக்கி பார்வைக்கு கொண்டு வந்து என்ன கொடுமைடா சாமி.. தாங்க முடியலை.
பாவம் எந்த சாமிக்கு இத்தனை மாசம் மவுன விரதம் இருக்க முடியும்னு சொல்லி இருந்தா கொஞ்சம் ஆறுதலவாவது இருந்திருக்கும்!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications