Kanmani serial: பத்தினி தெய்வம்...இங்கே சின்னவர் கேரக்டர் அடிவாங்கிருச்சே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னவரின் மச்சான் குமரேசன் ஒரு பெண்ணை ஏமாத்தி வயித்துல குழந்தையை கொடுத்துட்டான். அப்போ சின்னவர் ஏமாற்றிய பெண் சித்ராவைப் பார்த்து இவதான் என்கிட்டே போன்ல நரி காக்கா கதை சொன்ன பத்தினி தெய்வம்னு சொல்றார்.

இந்த இடத்தில் சின்னவர் கதாபாத்திரம் அடிபட்டுப் போச்சுங்க. ஏமாத்தினவன் ஆண்.. குமரேசன் தன்னை கல்யாணம் செய்துக்குவேன்னு நம்பி ஏமாந்தவள் சித்ரா.

இதை கண்டுபிடிச்சு சித்ராவை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து உண்மையை நிரூபிக்கும் சின்னவர் கண்ணன் சித்ராவை இவதான் அந்த பத்தினி தெய்வம்னு சொல்லி கையை இழுத்து தள்ளிஅறிமுகப்படுத்தறது முகம் சுளிக்க வைக்குது.

ரேஞ்சுக்கு சின்னவர்

ரேஞ்சுக்கு சின்னவர்

சன் டிவியின் கண்மணி சீரியலை சின்ன கவுண்டர் ரேஞ்சுக்கு சின்னவர் கண்ணனுக்கு அந்த ஊர் மக்கள் மதிப்பு கொடுக்கற மாதிரி சீரியல் கதை போகுது. இந்த ரோலில் நடிகர் சஞ்சீவ் நடிக்கறார். உண்மையில் கண்மணி சீரியலின் சின்னவர் கேரக்டருக்கு ஓகேதான்.

சஞ்சீவ்க்கு ஏத்த ரோல்

சஞ்சீவ்க்கு ஏத்த ரோல்

நடிகர் சஞ்ஜீவ்க்கு ஏத்த மாதிரியான ரோல் கிடைத்து, அவரும் நடிப்பில் நன்றாகவே அசத்தி நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கார். அவர் மீது ஒன்றும் குறையில்லை. மனிதர் மனது கஷ்டத்தில் வசனம் பேசி அழும்போது நம்மையும் அழ வைத்துவிடும் அளவுக்கு கதைக்குள் நம்மை மூழ்க வைப்பவர்.

கேரக்டர் இமேஜ்

கேரக்டர் இமேஜ்

சின்னவர் கேரக்டர் என்றால் மக்கள் மத்தியில் ஒரு இமேஜ் இருக்கு. அவங்க பெண்களை இழிவாக பேசக் கூடாது. கிண்டல் அடிக்கக் கூடாது. மத்தபடி சின்னக்கவுண்டர் போல சிரிக்கலாம்.. விளையாடலாம்.. பம்பரம் விடலாம். சின்னவரும் முத்துச்செல்வியுடன் சேர்ந்து இப்படித்தான் ஆட்டம் போட்டார். ஆனால், பெண்களை பற்றி பேசும்போது மரியாதையை பணிவை கடைப்பிடிக்க வேண்டும்.

வசனம் ஓவரா

வசனம் ஓவரா

சித்ராவை கல்யாணம் செய்துக்கறேன்னு சொல்லி ஏமாத்தினது குமரேசன். கண்ணனிடம் மாட்டாதே என்று சொல்லிக்கொடுத்து அவளை ஒளித்து வைத்திருப்பதும் அவன்தான். இப்படிப்பட்ட நிலையில், அந்த பெண்ணை பத்தினி தெய்வம்னு சொல்ற அந்த ஒரு வசனத்தின் சின்னவர் முகம் சுளிக்க வச்சுட்டார்.

பத்தினி தெய்வம் போன்ற வசனங்கள் எல்லாம் பழைய படத்தில் வரும் அர்த்தமுள்ள வசனங்கள். அதை வச்சு கிண்டல் அடிப்பது இப்போதைய காலக்கட்டத்தில் முகம் சுளிக்கத்தான் வைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+