Kanmani Serial: சின்னவர் ஆக்ஷன் ஹீரோவா மாறப் போகிறார்!
சென்னை: என்னதான் சொல்லுங்கள் சின்னக் கவுண்டர் படத்துக்கு இன்று வரை ஈடு இணை என்று எந்த படமும் இல்லை. அதில் விஜயகாந்த் சின்ன கவுண்டரே என்று அழைக்கப்படுவார்.
சன் டிவியின் கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ் சின்னவரே என்று அன்பாய் அழைக்கப்படுகிறார். இவரும் சின்னக்கவுண்டர் போல வேட்டி சட்டைதான் எப்போதும். அவ்வப்போது சின்ன கவுண்டர் சீன்களை நினைவு படுத்துகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்து தடம் புரளாமல் கதையை ஒரே டிராக்கில் நிதானமாக கொண்டு போகிறார் இயக்குநர்.

ஜெயிலில் அக்கா
அக்கா வீட்டில் இருக்கும் வரை, மற்றவர்கள் எது சொன்னாலும் பொறுமையாக இருந்தே பழக்கப்பட்ட கண்ணனுக்கு, அக்காவை தான் இல்லாத நேரத்தில் போலீஸ் பிடித்து செல்ல வீட்டினர் அனைவரும் விட்டு விட்டனர் என்று கோபம் வருகிறது பாருங்கள். நனறாக இருந்தது அந்த காட்சி.

சவுண்டு புரியுதா
இப்போ புரியுதா சவுண்டு...நான் ஏன் என்னை ஒண்ட வந்த பிடாரின்னு திட்டியும் கேட்டுகிட்டு இருந்தேன்னு. அக்காவுக்கு மாமாவுக்கு அடுத்து நான்தான் சவுண்டு பாதுகாப்புக்கு இருந்தேன். அதுக்காகத்தான் இவங்க என்ன திட்டினாலும் கேட்டு, ரோஷம் இல்லாம இருந்தேன் .நீ கூட உனக்கு ரோஷம் இல்லையான்னு கேட்டே..இப்போ புரியுதான்னு அழுதுக் கொண்டே கண்ணன் பேசுவது கலங்க வைத்து விட்டது.

சின்ன அத்தை
சின்ன அத்தையை எதிர்த்து பேசும் போது, தனது அக்காவை ஜெயிலுக்கு அனுப்பிய ரோஷம் தெரிகிறது. பாலில் விஷத்தை கலந்து கொடுத்தது யாருன்னு மட்டும் தெரியட்டும் .அப்புறமிருக்கு மவனே அவனுக்கு கச்சேரி என்று சொல்லும்போது கண்ணன் ஆக்ஷன் ஹீரோவாகவும் களம் இறங்கப் போகிறார் என்று தெரிகிறது.

ஆகாஷ் வளர்மதி
வளர்மதி தன் புருஷன் ஆகாஷ் சவுந்தர்யாவுடன் போனில் பேசுவதை கேட்டுவிட்டு, அவனிடம் சண்டை போடுவதே மாட்டிக்கிட்டான் ஆகாஷ்னு நினைக்க தோன்றுகிறது.அது மட்டுமில்லாமல், பசிக்காத அவனை டேபிள் முன் உட்கார வைத்து சாதத்தை தட்டு நிறைய போட்டு ,ஊட்டிவிடும் காட்சி, அவளை சைக்கோவாக்கி கதையை கொண்டு போவது போல எண்ண வைக்கிறது. என்னாகுமோ!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications