Kanmani Serial: கணவா கண்ணடிச்சு கூப்பிட்டா வந்துடணும்!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சொந்தத்தில் திருமணம் செய்து வைக்கும் கதையை கையில் எடுத்து இருக்கிறார்கள். அதோடு கிராமத்தில் நல்ல நிலையில் இருக்கும் ஒரு பெரிய குடும்பம் எப்படி இருக்கும் என்பதையும் காண்பித்து இருக்கிறார்கள்.
விஜயலட்சுமி அம்மாவின் தம்பி கண்ணன் அந்த ஊரில் மாமா பெயரை காப்பாற்றி, சின்னவர் என்று பெயர் எடுத்து மக்கள் செல்வாக்கில் இருக்கிறார். கூட்டு குடும்பத்தில் விஜயலட்சுமி அம்மாவின் மாப்பிள்ளைகள், நாத்தனார்களுக்கு கண்ணனை பிடிக்கவில்லை.
இந்த நேரத்தில்தான் மாமா தர்மதுரை இறந்துவிட, கண்ணன் பல கஷ்டங்கள், அவமானங்களை சந்திக்க நேருடுகிறது. ஒரு வழியாக சவுந்தர்யாவுக்கும் கண்ணனுக்கும் அவர்கள் ஆசைப்பட்டபடி கல்யாணம் நிச்சயமாகுது.

அக்கா மகள்
சவுந்தர்யா தாய்மாமன் கண்ணன் மேல் காதல் கொள்ள, கண்ணனுக்கும் அக்கா பொண்ணு சவுந்தர்யா மேல் ஆசை வந்துருது. இருவருக்கும் கல்யாணம் செய்துவைக்க இருவரின் ஆசைப்படியும் வீட்டில் முடிவு செய்யறாங்க. இந்த இடத்தில்தான் இன்னும் தாய்மாமன், அக்கா மகள் ஆகிய சொந்தத்தில் கல்யாணம் செய்துக்கலாமா என்கிற கேள்வி வருது. தாய் மாமன் மீது ஆசை வராத பெண்களுக்கும் ஆசையை தூண்டும்படி காட்சிகள் அமைந்து இருக்கிறது.

கதைகள் சமூக அக்கறை
இது போன்ற கதைகளை தேர்வு செய்யும்போது சமூக அக்கறையுடன் சில விஷயங்களையும் சீரியல் மூலம் மக்களுக்கு தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்.கரணம் சொந்தத்தில் கல்யாணம் செய்து, குறைபாடுள்ள குழந்தைகளை பெற்று மன குமுறலுடன் இருக்கும் பெற்றோர்கள் அதிகமாகி வருகிறார்கள். இது தெரிந்தும் நாம் சும்மா இருந்தால் எப்படி?

ஆசையை தூண்டுகிறது
சவுந்தர்யா தாய்மாமன் கண்ணன் மீது காதல் கொண்டு இருவரும் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் இப்படி முறைப்பையன்,பெண்களுக்கு நாமும் இப்படி கல்யாணம் செய்துக்கலாம் என்கிற ஆசையைத் தூண்டும் படி இருக்கிறது. எனவேதான் சமூக அக்கறையுடன் சில கருத்துக்களையும் சொன்னால் தப்பில்லை. இப்போது பெரியவர்கள் மட்டும் இல்லை, சிறியவர்களும் சொந்தத்தில் கல்யாணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

கண்ணடித்தால் கணவா
கண்ணன் அடுப்பங்கரையில் அக்காவுடன் பேசிக்கொண்டு நிற்க, அங்கு வரும் சவுந்தர்யா கண்ணனைப் பார்த்து கண்ணடிச்சு கூப்பிடுகிறாள். அதிர்ந்த கண்ணன் வந்து என்ன புள்ளேன்னு கேட்க.. என்ன மாமா நீ புள்ளே கிள்ளேன்னு கூப்பிட்டுக்கிட்டு... கணவா பொண்டாட்டின்னு ஆசையா கூப்பிடுன்னு சொல்லி கிட்டே வந்து கிட்டே வந்து அவனது கன்னத்தில் முத்தமிடுகிறாள்.
கணவா இனிமேல் நான் கண்ணடிச்சு கூப்பிட்டால் உடனே வந்துடணும் சரியான்னு கேட்கிறாள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications