Kanmani Serial: பெண்கள் வீட்டை விட்டு போறதுன்னா எங்க போவாங்க:?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பொண்ணு வீட்டில் பிரச்சனைன்னா வீட்டை விட்டுப் போறது போல சீரியலில் காமிக்கறாங்க... நிஜத்தில் பெண்கள் அப்படி வீட்டை விட்டு போறதில்லையே...!

அப்படி வீட்டை விட்டு போறதுன்னா பெண்கள் எங்கே போவாங்க? அதையே சீரியலில் எடுக்கறாங்க.. இது தப்பில்லையா?

இந்த காலத்தில் பெண்கள் அப்படி வீட்டை விட்டு போகும் போது தப்பான இடத்தில் மாட்டிக்கொண்டு சிக்கி சீரழியும் நிலைதானே ஏற்படும். இதை ஏன் சீரியல் எடுப்பவர்கள் மறந்து போனார்கள்?

கண்மணி சீரியல்

கண்மணி சீரியல்

சன் டிவியின் கண்மணி சீரியலில் சின்னவரின் மனைவி சவுந்தர்யாவுக்கு இனி குழந்தை பிறக்கும் பாக்கியம் இல்லையாம். அதை இனி வரும் எபிசோட்களில் சின்னவர் கண்ணன் தனது மனைவி சவுந்தர்யாவிடம் பக்குவமாக எடுத்து சொல்ல, சவுந்தர்யா இனி உனக்கு பாரமா இருக்க மாட்டேன் மாமா நான் உன்னை விட்டு போறேன் என்பது போல ப்ரோமோ வெளியிட்டு உள்ளார்கள்.

சவுந்தர்யா கண்ணனை விட்டு

சவுந்தர்யா கண்ணனை விட்டு

சரி சவுந்தர்யா மாமன் அதாவது புருஷன் மற்றும் பிறந்த வீட்டை விட்டு எங்கே போக முடியும். எங்கு போனாலும் பாதுகாப்பு கிடைக்குமா? அப்படி வீட்டை விட்டு போவது என்பது மற்ற பெண்களுக்கு முன் உதாரணமாக ஆகிவிட்டதா? ஒரு பிரச்சனை எனும்போது பெண்கள் வீட்டை விட்டு வே;ளியேறுவதுதான் சரி என்று பெண்கள் முடிவெடுப்பது சரி என்பது போல இந்த சீரியலின் கதாபாத்திரம் அமைந்து விடுகிறது.

அவ்வளவு பெரிய விபத்தா

அவ்வளவு பெரிய விபத்தா

அதோடு குழந்தை அபார்ஷன் இனி குழந்தை பிறக்காது என்று சொல்லும் அளவுக்கு அவ்வளவு பெரிய விபத்தையா ஏற்படுத்திவிடும் மருத்துவ உலகில்?. கதைக்கு என்றாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா? ஒரு ஐந்து வருடம் கர்ப்பம் தரிக்க முடியாதது இப்படி அல்லவா மருத்துவ உலக தருமம் கூறும்.

கர்ப்ப பையை

கர்ப்ப பையை


கதையில் குழந்தையே பிறக்காது என்று மருத்துவர் கூறுவதற்கு சரியான காரணத்தை கூறவில்லை. ஒன்று கருப்பையை அகற்றி விட்டோம் என்று கூற வேண்டும். அதுவும் இல்லை. கருப்பை இப்போதைக்கு மீண்டும் ஒரு கருவைத் தாங்கும் சக்தியை பெறவில்லை. அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றாவது கூறி இருக்க வேண்டும். ஒரேயடியாக குழந்தையே பிறக்காது என்று கூறிவிட்டு, அந்த கதாபாத்திரம் வீட்டை விட்டு வெளியேறுவது போல ப்ரோமோ வெளியிட்டு இருப்பது பெண்களின் மன உணர்வை காயப்படுத்துவதாக இருக்கிறது.

கதைக்கு என்றாலும் மனம் ஒப்பவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+