Kanmani Serial: யாருகிட்ட... சின்னவருகிட்டேயா.. மாட்னடி நீ !

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னவர்.. இதுதான் சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணனுக்கு மக்கள் கொடுத்து இருக்கும் மரியாதையான பெயர். இவர்கிட்டேயே சித்ரா வாலாட்டறா விடுவாரா சின்னவர்?

சீரியல்களிலும் சரி, படங்களிலும் சரி உண்மையை நிரூபிக்க என்னதான் நேர்மையானவர்கள் பாடு பட்டாலும் ,கடைசியில் அது உல்டாவாக மாறிவிடும்.

அப்படி ஒரு நிலைமையில்தான் கண்மணி சீரியலின் சின்னவர் கண்ணனாக நடிக்கும் சஞ்சீவ் இருக்கிறார். நடிகர் சஞ்சீவ் நடிப்பு பற்றித்தான் எல்லாருக்கும் நல்லாவே தெரியுமே!

சின்னவர் குமரேசன்

சின்னவர் குமரேசன்

தர்மதுரை ஐயாவின் மகள் சரண்யாவின் புருஷன் குமரேசன், சித்ரா என்கிற பெண்ணை காதலிச்சு ஏமாற்றி கர்ப்பமாக்கி விடுகிறான். இந்த கர்ப்பத்தை கலைச்சுடுன்னு சித்ராகிட்டே குமரேசன் சொல்ல ,இல்லைங்க முடியாது.. நீங்க என்னை கல்யாணம் செய்துக்கணும்னு கேட்கிறாள்.

நகையை வச்சுக்கோ

நகையை வச்சுக்கோ

கோயில் நகையை திருடி சித்ராவிடம் கொடுத்து, இந்த ஊரை விட்டு எங்கேயாவது போயிடுன்னு சொல்றான்.நகை திருடின குற்றச்சாட்டை முத்துச்செல்வி மீது போட்டு அப்போதைக்கு தப்பிச்சுக்கறான்.அந்த நகையை சித்ராவின் அக்கா புருஷன் சேட்டு கடையில் அடகு வைக்கப் போயி போதையில் உண்மைகளை சொல்லிடறான்.

சின்னவரிடம் சேட்டு

சின்னவரிடம் சேட்டு

சின்னவரிடம் சேட்டு உண்மையை சொல்லிவிட கடும் கோபத்தில் சின்னவர் வீட்டுக்கு வர்றார். குமரேசனை கூப்பிட்டு உண்மையை கேட்க..அவன் மறுக்கிறான். சரண்யாவின் அம்மா குமரேசா இது என் பொண்ணோட வாழ்க்கை பிரச்சனை.. உண்மையை சொல்லுன்னு கேட்கறாங்க.. கண்ணா நீ சொல்றது உண்மையான்னு தம்பி சின்னவரை பார்த்தும் கேட்கறாங்க.

உண்மைதான் சின்னவர்

உண்மைதான் சின்னவர்

சின்னவர் சொல்றது உண்மைதாங்கன்னு சித்ராவின் அக்கா புருஷன் வந்து சொல்ல, எங்கே சித்ராவுக்கு போன் போட்டு இது உண்மையான்னு சொல்லுன்னு கேட்கறான் குமரேசன்.அவன் தனது மச்சினிச்சிக்கு போன் போட்டு.. குமரேசன் உன்னை காதலிச்சு கர்ப்பமாக்கினதை சொல்லுன்னு சொல்ல, அவள் குமரேசனா? அவரை நான் பார்த்தது கூட இல்லையேன்னு பல்டி அடிக்கறா.

சின்னவருக்கு இப்போதைக்கு தோல்விதான் என்றாலும்.,சின்னவருகிட்டேயா ? மாட்டினேடின்னு சொல்ல தோணுது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+