Kanmani Serial: வாழ்க்கை என்றால் இப்படித்தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் முத்துச்செல்வி கணிப்பு சரியாகத்தான் ஆகிவிட்டது. கண்ணனும், சவுந்தர்யாவும் இப்போது ரொம்ப நெருக்கமாகி காதலிக்கிறார்கள்.

இருவருக்கும் கல்யாணம் செய்வதும் முடிவாகிட இன்னும் ரொமான்ஸ் தூள் பறக்குது. ஆனால், பாவம் சின்னவரே சின்னவரே என்று சுற்றி சுற்றி வந்த முத்துச்செல்வி இப்போது அவளையும் அறியாமல் கெட்டவனிடம் சிக்கி இருக்கிறாள்.

வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் என்பது போல, தென்றல் போல நடுவில் வந்து புயல் போல வீசி கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் முத்துச்செல்வியின் தியாகம் யோசிக்க வைக்கிறது.

அறியாமல் தன்னுள்

அறியாமல் தன்னுள்

தன்னையும் அறியாமல் தன்னுள் கண்ணன் மாமா இருக்கும் விஷயம் சவுந்தர்யாவுக்கு தெரிந்து அவள் வெளிப்படுத்தும் விதம் அருமை. அதோடு ஆகாஷுடன் தனக்கு உண்டானது உண்மையான காதலில்லை என்றும், காதலித்து அது சரி வரவில்லை என்றால் நட்பாகவும் இருக்கலாம் என்று முடிவு எடுப்பதும்கூட வித்தியாசமாக இருக்கிறது.

சின்னவர் கண்ணன்

சின்னவர் கண்ணன்

சின்னவரே சின்னவரே என்று தன்னை சுற்றி வந்த முத்துச்செல்வியுடன் விளையாடும் போது கூட ரொம்ப கவனமாகத்தான் விளையாடறார். நெத்தியில பொட்டு வச்ச போது கூட,பாரு புள்ளே எல்லாம் விளையாட்டுத்தான் என்று சொல்லிட்டு போகும் போதும் முத்துசெல்விதான் மனசில் வச்சு காதல் கொள்கிறாள். அவளை கல்யாணம் செய்துக்க முடிவு எடுத்த போதும் சின்னவராக இருந்துதான் முடிவு எடுக்கிறார்.

சவுந்தர்யா இல்லை

சவுந்தர்யா இல்லை

நாம ஆசைப்பட்ட பொண்ணுதான் நமக்கு கிடைக்கலை.சரி யாரையாவது கல்யாணம் பண்ணிக்கத்தானே போறோம்..அது இந்த புள்ளையா இருக்கட்டுமேன்னு முத்துச்செல்வியை கல்யாணம் செய்துக்க முடிவு எடுத்ததாக கண்ணன் அழுது கொண்டே பேசும்போது பார்ப்பவர்களுக்கும் கண் கலங்கி தண்ணீர் வருகிறது.

கண்ணன் சவுந்தர்யா

கண்ணன் சவுந்தர்யா

ஒரு வழியாக முத்துச்செல்வியை மறந்து இருவரும் அவள் நினைத்து விட்டு சென்றது போலவே. இருவரும் அவ்வளவு நெருக்கமாகி விடுகிறார்கள். ஒருவருக்குள் ஒருவர் மிக ஆழமாக பதிந்து ஒருவரை ஒருவர் நேசிப்பதை அழகாக காண்பித்து இருக்கிறார்கள். இதில் உறவுக்குள் கல்யாணம் என்பது யோசிக்க வைத்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+