Kanmani serial: கண்மணி ஆகாஷுக்கு அர்ஜுன் ரோஜா பிடிக்குமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களோடு மக்களா தங்கள் டிவியின் சீரியலை கொண்டு சேர்ப்பதில் வல்லவர்கள் சன் டிவி நிறுவனத்தார்.

கண்மணி சீரியலில் ஆகாஷாக நடிப்பவரை ஆகாஷாகவே பேசவிட்டு தனது வலைத் தளத்தில் லைவ் செய்து இருக்கிறது சன் டிவி.

இதுவும் மக்களின் நாடி பிடித்துப் பார்த்து செயல்படும் ஒரு யுத்திதான். வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு குதிரை மாதிரி ஓடிக்கொண்டே இருப்பதுதான் சன் டிவியின் வெற்றிக்கான ரகசியம்.

கிடைச்சது வளர்தான்

கிடைச்சது வளர்தான்

சவுந்தர்யாவை காதலிச்சீங்க... இப்போ வளர்மதியை கல்யாணம் செய்துக்கிட்டீங்கன்னு ஆகாஷிடம் கேட்டார்கள்..என்ன பண்றது.. கிடைச்சதை வச்சு வாழ வேண்டியதுதான்னு சொன்னார். சவுந்தர்யா பத்தி சொல்லுங்க என்றபோது.. பேருக்கு ஏத்த மாதிரிதான் அவங்களும் என்று சொன்னார்.

அழகான முத்துச்செல்வி

அழகான முத்துச்செல்வி

முத்துச்செல்வியைப் பத்தி சொல்லுங்க என்றபோது... முத்துச்செல்வி நல்ல அழகான பொண்ணு. பாவம் காதலையே தியாகம் செய்துட்ட ஒரு பொண்ணு.பார்ப்போம் அடுத்து என்ன நடக்குதுன்னு என்று சொன்னார்.

குண்டூசி குமரேசன்

குண்டூசி குமரேசன்

கொளுத்தி போடற கேரக்டர்னு சொல்லணும்னா குண்டூசி குமரேசன்தான்.அவர் இப்போ கூட எங்கியாவது இருந்து கொளுத்திப் போட்டுக்கிட்டு இருப்பாரு. சீரியலில் பிடிச்ச ஜோடி யாரு என்றால், நானும் வளர்மதியும்தான் என்கிறார்.இல்லை சன் டிவியின் வேற சீரியலில் சொல்லுங்க என்றபோது ரோஜா சீரியலில் அந்த ஜோடி எனக்கு ரொம்ப பிடிக்கும். பையன் ஹைட்டா இருப்பான்.. பொண்ணு ஹைட் கம்மியா கியூட்டா இருப்பா.எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.

பூர்ணிமா மேம்?

பூர்ணிமா மேம்?

முதன் முதலில் பூர்ணிமா மேம் மலையாளப் படத்தில்தான் நடிச்சு இருக்காங்க. நான் மலையாளத்தில் இருந்து நடிக்க வந்திருக்கேன். ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் ஷேர் பண்ணிப்பாங்க. அவங்க எனக்கு ஒரு அம்மா மாதிரிதான் என்று சொன்னார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+