Kanmani serial: நடிகர் சஞ்ஜீவ்க்கு கைக் கொடுத்து இருக்கும் கண்மணி
சென்னை: நடிகர் சஞ்சீவ் என்னதான் தளபதி விஜயின் நெருங்கிய நண்பர் என்றாலும், நட்பு என்பதெல்லாம் தொழிலில் வொர்கவுட் ஆகாது. அதையும், இதையும் இணைத்து குழப்பிக் கொள்வதில்லை இருவரும்.
அவர் பெரிய திரையின் தளபதி ஆகிவிட,சஞ்சீவ் சின்னத்திரையில் அவ்வப்போது கோலோச்சி வருகிறார். ஒரு வாய்ப்பு கிடைத்ததும் அதை பயன்படுத்தி கொள்வதில் சஞ்சீவ் செம நடிகர்.
கண்மணி சீரியலில் நல்ல கதாபாத்திரம் கிடைத்த நேரத்தில், தனது நடிப்பின் வெறித்தனத்தை காண்பிக்க வேண்டிய இடத்தில் காண்பித்து மக்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார்.

விஜய் சாயலில்
சஞ்சீவ் நடிப்பு கொஞ்சம் அல்ல, நிறையவே விஜய் சாயலுடன் இருந்தாலும் அதை கண்டு பிடிக்க முடியாதவாறு சஞ்சீவ் நடித்து கோல் போட்டுவிடுகிறார். அலட்டல் இல்லாத அவரின் நடிப்புக்கு ஏற்ற மாதிரியான கதாபாத்திரம் கண்மணி சீரியலில் சின்னவர் கண்ணன் வேடம் அமைந்து அவரை தூக்கி நிறுத்தி வைக்கிறது.

சன் டிவி சீரியல்
சஞ்சீவ் வாய்ப்பின்றி சோர்ந்து கிடந்த போதுதான் சன் டிவியில் விகடன் டெலிவிஸ்டாஸின் திருமதி செல்வம் சீரியலில் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது. சீரியல் செம ஹிட். அதே நேரத்தில்தான் கலைஞர் டிவியின் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் கிடைத்து ரொம்ப பிசியாக இருந்தார் சஞ்சீவ்.

முடிந்த நிலையில்
திருமதி செல்வம் சீரியல், மானாட மயிலாட ஷோ முடிந்த நிலையில், கிட்டத்தட்ட 5 வருஷங்களுக்கு சஞ்சீவ்க்கு வாய்ப்புக்கள் எதுவும் சொல்லும்படி அமைந்துவிடவில்லை. ஜீ தமிழ் டிவியின் சீரியல் ஒன்றில் நடித்துக் கொண்டு இருந்த சஞ்ஜீவ்க்கு கண்மணி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வர...நழுவ விடாமல் கப்பென்று பிடித்துக் கொண்டார்.

சன் டிவி சீரியல்
சன் டிவியின் 9 மணி நேர சீரியலான கண்மணி சீரியலில் சின்னவர் கண்ணன் கதாபாத்திரம் சஞ்ஜீவ்க்கு அல்வா சாப்பிடற மாதிரி கிடைச்சு மனிதர் நடிப்பில் வெளுத்துக் காட்டுகிறார்.அதே சமயம் கல்லாவும் கட்டி வருகிறார். ஒவ்வொரு காட்சியிலும் நல்ல அர்ப்பணிப்பான நடிப்பு என்று அசத்தி வருகிறார் சின்னவர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications