Kanmani Serial: முன்னாள் காதலனை சவுந்தர்யா பார்க்கும் ஆங்கிள் நல்லாருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யா கண்ணன், வளர்மதி ஆகாஷ் ஆகிய இரு ஜோடிகளுக்கு ஒன்றாக கல்யாணம் நடக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஆனால், சவுந்தர்யா கண்ணன் கல்யாணத்தை நடத்த விட கூடாது என்று ஆகாஷின் அம்மா, வளர்மதியின் அம்மாவிடம் சொல்லி வச்சு இருக்காங்க. இப்போ அதற்கான வேலைகளில் வளர்மதி அம்மா ஈடுபட்டு இருக்காங்க. .

ரெண்டு கல்யாண ஜோடிகளும் ஒரே மாதிரி உடைகள் அணியலாம் என்று திட்டமிட்டு இருந்த நேரத்தில் வளர்மதிக்கு இது பிடிக்கவில்லை.

 எதுக்காக வளர்மதி

எதுக்காக வளர்மதி

வளர்மதி ஆகாஷை அழைச்சுக்கிட்டு போயி, ஏற்கனவே எடுத்த உடைகளை கடையில் கொடுத்துட்டு வேற உடைகள் வாங்கிட்டு வந்து இருக்கா. இப்போ எடுத்த உடைகள் பிடிச்சு இருக்கா வளர்மதி..பிடிக்கலேன்னா அப்பவே சொல்லி இருக்கலாம் இல்லையான்னு சவுந்தர்யா கேட்கறா. ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில் கல்யாணம் நடக்கும்போது ஒரே மாதிரி டிரஸ் இருந்தா நல்லாருக்கும்னுதானே எல்லாரும் இப்படி முடிவு செய்தொம். எதுக்காக இப்படி செய்தே வளர்மதின்னு சவுந்தர்யா கேட்க...அது எதுக்குக்கா இப்போ விடுன்னு சொல்றா வளர்மதி.

 நானும் நீயும்

நானும் நீயும்

இல்லை வளர்மதி நீ உன் மனசில் என்ன நினைச்சேன்னு சொல்லுன்னு சவுந்தர்யா கேட்க, தப்பா நினைச்சுக்காதேக்கா.. நீயும் ஆகாஷும் ஒரு காலத்தில் லவ் பண்ணிங்க.அப்படி இருக்கையில், நீயும் நானும் ஒரே புடவையில் இருந்து அதை ஆகாஷ் பார்த்து உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் ஃபீலிங்ஸ் வந்துச்சுன்னா என்ன பண்றதுன்னுதான் இப்படி செய்தேன்னு சொல்றா வளர்மதி.

 ஆகாஷும் நானும்

ஆகாஷும் நானும்

ஆகாஷும் நானும் நல்ல ஃபிரண்ட்ஸா இருக்கலாம்னு முடிவு பண்ணித்தான் இந்த கல்யாணமே நடக்குது. அதனால, நாங்க ரெண்டு பேரும் நல்ல மன நிலையில் மெச்சுர்டா முடிவு எடுத்து இருக்கோம்., எந்த ஃபீலிங்க்ஸுக்கும் இடமில்லை. மனசில் இதை உறுதியா வச்சுக்கிட்டு எந்த முடிவு வேணும்னாலும் எடு.அனால், இன்னொரு தடவை இந்த மாதிரி சந்தேகம் மட்டும் வாழக்கையில் எந்த காரணத்தை முன்னிட்டும் கூடாதுன்னு சொல்லிட்டு போறா.

 எடுத்துக்கலாம் நல்லதை

எடுத்துக்கலாம் நல்லதை

இது மாதிரி ஒரு பார்வையில் முன்னாள் காதலனை ஒரு பெண் பார்ப்பது என்பதும், அதற்கு அந்த ஆணும் துணை நிற்பது என்பதும் சமூகத்துக்கு நல்ல விஷயம்தானே. இப்படி சீரியல்களில் பல நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினால் அப்படியே பக்குன்னு புடிச்சுக்கணும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+