Kanmani Serial: இச்சு இச்சு இச்சு இச்சு கொடு...இவங்க டான்ஸ் கூட நல்லாருக்கே!
சென்னை: வெடி படத்தில் விஷால், ஷமீரா ரெட்டி இருவரும் இச்சு இச்சு இச்சு இச்சு கொடுன்னு பாடி டான்ஸ் ஆடி பார்த்து இருப்பீங்க..இந்த சூப்பர் ஹிட் பாடலுக்கு கண்ணனும், சவுந்தர்யாவும் வயல் வரப்புல சந்தோஷமா ஆடிப்பாடி பார்த்து இருக்கீங்களா?
சன் டிவியின் கண்மணி சீரியல் நாயகன் கண்ணன், நாயகி சவுந்தர்யா இருவருக்கும் தர்மதுரை கல்யாணம் நிச்சயம் செய்துவிட...வந்துருது கண்ணனுக்கு குஷி. அப்புறம் என்ன கனவுதான்..கனவில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்... டான்ஸ் என்று ஒரே அமர்க்களப்படுது.
சவுந்தர்யாவின் புடவைக்கட்டும், தலை கொண்டையும். ரசிகர்களை சுண்டி இழுக்க...வயல் வரப்பு செம க்ரீன் என்று அசத்துகிறது. நல்ல லொகேஷனில் பாடல் மொத்தத்தையும் ஷூட் செய்து சீரியலில் ஒளிபரப்பி இருக்கிறார்கள்.

ரஷ்யாவில் மேல்படிப்பு
ரஷ்யாவில் மேல்படிப்பு படித்துவிட்டு வரும் அக்கா பெண் சவுந்தர்யா, தன்னைத்தான் விரும்புகிறாள் என்று தப்புக்கணக்கு போட்டுவிடுகிறான் கண்ணன். அவள் அங்கேயே ஆகாஷ் என்பவனை காதலித்து, அந்த காதலை கண்ணன் மாமாவிடம் சொல்லி, மாமா மூலமாக வீட்டில் அப்பா, அம்மாவிடம் சம்மதம் வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாள் சவுந்தர்யா.

சவுண்டு எனக்குத்தான்
சவுந்தர்யாவை சவுண்டு சவுண்டு என்று ஆசையாக அழைக்கும் கண்ணன், சவுண்டு என்னைத்தான் காதலிக்கிறாள், சவுண்டு எனக்குத்தான் என்று கற்பனை உலகில் மிதக்க ஆரம்பித்து, இச்சு இச்சு இச்சு இச்சு கொடு என்று கனவில் ஆடிப்பாடி மகிழ்கிறான். அவன் கனவு அவனோடு மட்டும் இருந்தால் எப்படி...ரசிகர்களுக்கு கண்களுக்கு விருந்து போல இந்த பாடலுக்கு இருவரும் நடனமாடுவதை காண்பித்து இருக்கிறார்கள்.

ஊரெல்லாம் செய்தி
எனக்கும் சவுண்டுக்கும் கல்யாணம் என்று ஊரெல்லாம் செய்தி பரப்பி விட்டுவிடுகிறான் கண்ணன். மேளம், தாளம் என்று அழைத்துக்கொண்டு டிராக்டரில் சென்று செய்தியை ஊரெல்லாம் மைக் வச்சு கத்தி பரப்பி விடுகிறான் கண்ணன். அவனிடம் இல்லை மாமா.. உனக்கும் எனக்கும் செட்டாவாது என்று சொல்ல, மாமா மாமா என்று ஒடி வருகிறாள் சவுந்தர்யா.

வா சவுண்டு நீயும் சொல்லு
வா சவுண்டு.. நீயும் டிராக்டரில் ஏறி மைக்கில் சொல்லுன்னு கூப்பிடறான் கண்ணன். கோபத்தில் டிராக்டரில் ஏறும் சவுந்தர்யா...மைக்கை ஒரு கையால் பொத்திக்கொண்டு என்ன மாமா நீ பாட்டுக்கு அவசரப்பட்டு இதெல்லாம் செய்யறே...அன்னிக்கு உன்கிட்டே நான் ஆகாஷைத்தானே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்னு சொன்னேன்...நீயே என் கல்யாணத்துக்கு தடையா இருக்கியே மாமான்னு சொல்ல, ஆடிப்போய்விடுகிறான் கண்ணன்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications